2017ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கட் அணி 57 சர்வதேச போட்டிகளில் பங்குகொண்டுள்ளது.
13 டெஸ்ட் போட்டிகள், 29 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 இருபதுக்கு இருபது போட்டிகள் அவற்றில் அடங்கும்.
அவற்றில் 14 போட்டிகளில் மாத்திரமே பெற்றிப்பெற்றிருப்பது இலங்கை கிரிக்கட்டின் தற்போதைய வீழ்ச்சி நிலையை நன்கு புலப்படுத்துகின்றது. 2017ஆம் ஆண்டு இலங்கை அணி பங்குகொண்ட 57 போட்டிகளில் 40 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
தற்போது இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க பொறுப்பேற்றுள்ளமையை கிரிக்கட் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்
இந்தநிலையில் 2017ஆம் ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு 2018ஆம் ஆண்டு கிரிக்கட் துறையை புதிய பாதைக்கு கொண்டுச் செல்ல முயலும் என்பதே அனைவரது நம்பிக்கையாகும்.