கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து விவகாரம் -ஆளுநரினால் சுயாதீன விசாரணைக்குழு நியமனம்

எம்.ஜே.எம்.சஜீத்

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபை தொடார்ந்து அநீதியிழைத்து வருவதாகவும் தமக்கான  நியாயத்தை பெற்றுத் தருமாறும் கிழக்கு மாகாண ஆளுனாரிடம தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை அவரது அலுவலகத்திற்கு சென்று கையளித்துள்ளது.
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக பயணிக்கும் தமது பஸ் வண்டிககளின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் நிருவாகம்  நடந்து கொள்கின்றமை பற்றியும், இதனால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், மேற்படி மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளார் எம்.எஸ்.பைறூஸ் தெரிவித்தார். 
“ஏற்கனவே, மேற்படி பயணப் பாதையில் போதியளவான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட பயண வழி ஊடாக சேவையில் ஈடுபடும் பொருட்டு, மேலதிகமாக பல பஸ் வண்டிகளுக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சாரின் சிபாரிசுகமைய கிழக்கு மாகாண போக்கு வரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார்.

இதனால், ஏற்கனவே தொழிலில் ஈபடுபட்டுக் கொண்டிருக்கும்  பஸ் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை எழுத்துமூலம் அறிவித்திருந்தோம், கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்திந்து பிரச்சினைகளை தெளிவுபடுத்தியிருந்தோம். ஆயினும், எமக்கு எவ்வித தீர்வுகளும் இதுவரை கிடைக்கவில்லை. இதனாலேயே, மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் நாம் முறைப்பாடு செய்துள்ளோம்” 

தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு நிரந்தரமான தீர்வொன்றினை நாடியே, தாம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமது முறைப்பாட்டை கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக,  இ.போ.சபையின் 14 பஸ்களும் தனியாருக்கு சொந்தமான 21 பஸ்களுமாக மொத்தம்  35 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பஸ் வண்டிகள் ஒன்றிணைந்த சேவை ஊடாக, போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து ஆதிகார சபையின் தவைரும், வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளரும் இணைந்து மேலதிகமாக பஸ்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

குளிரூட்டப்பட்ட  பஸ்போக்கு  வரத்திற்ககான தற்காலிக பாீட்சாத்தமான  ஒரு மாத கால நடவடிக்கை என கூறப்பட்ட போதிலும் தற்போது ஒரு வருடத்தைத் தாண்டிய சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதுடன் அவைகள் புரண சொகுசு சேவையாகவும் அமையவில்லை.

 இதனால் ஏற்கனவே இப்பயண வழியில் சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகளின் நேர இடைவெளி களவாடப்படுவதாகவும், மேலும் பலவிதமான அசௌகரியங்களை தாம் எதிர்கொள்வதாகவும் தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். 

மேற்படி விடயங்களை கேட்டறிந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் சுயாதீன விசாரணைக்குழுவை அமைத்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு  ஆளுனரது செயலாளரை பணித்துள்ளார்.