கிழக்கில் ஒரு முகத்தையும் வடக்கில் ஒரு முகத்தையும் காட்டும் புதிய நாடக அரசியல் ஒன்று அரங்கேறுகிறது..

             வடக்கு கிழக்கு இணைப்புக்கு அமைச்சர் ஹக்கீம் அடித்தளம்….

வடக்கும் கிழக்கும் இணையக் கூடாது  என்பதில் முஸ்லிம் தலைமகள் உறுதியாக இருக்கும் போது அமைச்சர் ஹக்கீமும் அவர் சார்பு கட்சியினரும் நழுவல் போக்கில் இதுவரை இருந்துவிட்டு இன்று கிழக்கில் ஒரு முகத்தையும் வடக்கில் ஒருமுகத்தையும் காட்டும் புதிய நாடக அரசியலை இன்று அரங்கேற்றி வருகின்றனர்.
கிழக்கில் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான கட்சி தனித்தும் ஐ தே கட்சியுடன் இணைந்தும் போட்டி போடும் அதே நேரம் வடக்கில் முஸ்லிம் சமூகத்திற்கு எந்த விதத்திலும் உதவாத கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த வித உடன்படிக்கைகளும் இல்லாமல் இணைந்து இந்த உள்ளுராட்சிசபை தேர்தலில் போட்டியிட அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான கட்சி முடிவெடுத்திருப்பது வடக்கில் வாழும் முஸ்லிம்களை நிம்மதியாக வாழவிடாமல் செய்யும் விடயமாகும்…
அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்று மக்களின் அதிக ஆதரவை பெற்று இன்று அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லீம் காங்கிரஸ்கட்சி  பல்வேறு போட்டிகளை ஏந்திக்கொண்டு சமாளிக்க முடியாமல்  இருக்கும் இந்தக்காலகட்டத்தில் திணறிக்கொண்டுயிருக்கிறது.
அமைச்சர் றிஷாட் தலைமையிலானா கட்சியை பழிவாங்க வேண்டும் என்று எதையும் செய்ய தயாராக   சம்பந்தனின் வடகிழக்கு இணைப்பு கயிற்றை விழுங்கிக்கொண்டு இன்று மரம் வீட்டுடன் இணைந்து தேர்தல் கேட்க முடிவெடுத்துள்ளது.இந்த முஸ்லிம் காங்கிரஸ்கட்சி முஸ்லிம் சமுகம் சார்ந்த கட்சி என்பது உண்மையாக இருந்திருந்தால் இவ்வாறு இணைந்திருக்குமா??
இந்த தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து முசலிப்பிரதேசபையில் மரசின்னத்திலும் நானாட்டான் மடு மேற்கு  மன்னார் நகரசபை மற்றும் பிரதேசபை யில் வீட்டு சின்னத்திலும் போட்டியிட முன்வந்திருக்கிறது இது அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சியை எதிர்க்க அவர்கள் எடுத்திருக்கும் இறுதி ஆயுதம் இது என்று அவர் சார்பு கட்சியினர் ஓசையிட்டு திருக்கின்றனர்.
இந்த தமிழ் கூட்டமைப்பு கட்சி வடக்கில் வாழும் முஸ்லிம் எதை செய்திருக்கிறது வடக்கு மாகாணத்தின் ஆட்சியை தம் வசம் வைத்திருக்கிறது அந்த ஆட்சியின் மூலம் இந்த மீள்குடியேறிய முஸ்லிம் மக்களுக்கு  எதை செய்தது எதையும் செய்யாமல் வருகின்ற அபிவிருத்திகளை எல்லாம் தடுக்கும் இந்த தமிழ் கூட்டமைப்புடன் தேனிலவு தேவைதானா  இந்த இணைப்பு நாளை வடகிழக்கு இணைப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த உதவ வேண்டும் என்று வேண்டினால் ஹக்கீம் அதையும் செய்து கொடுக்க தயங்கமாடடார் என்பது இந்த தேர்தல்கால கூட்டமைப்பின் மூலம் தென்படுகிறது….
எ. எம் .றிசாத்