இறுதி யுத்தத்தின் போது LTTE போராளிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன் : கருணா

FILE IMAGE
கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன்மை கருதித்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
 மட்டக்களப்பில் இருந்து அப்பாவி மக்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு கருணாதான் காரணம் என அண்மைக்காலங்களாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளுக்கு பதிலளிக்கும் முகமாக அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.
FILE IMAGE
 இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார், இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த எவரும் பலியாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அனைத்து விடுதலைப் புலி உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
அவ்வாறு அன்றைய வீரர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்திருக்காவிட்டால் அதிகளவிலானவர்கள் உயிரிழந்திருப்பார்கள்.நான் யாரையும் பலவந்தமாக அந்த காலப்பகுதியில் போராட்டத்திற்கு இணைக்கவில்லை.அவ்வாறு எவருடைய வீடுகளுக்கும் நான் சென்று எந்த பிள்ளைகளையும் பிடிக்கவில்லை. எனக்கும் அதற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.
 தற்போதைய தேர்தல் காலத்தில் திட்டமிட்டு சில தீய சக்திகள் இவ்வாறான பிரச்சாரங்களை செய்கின்றனர்.இதனை உண்மையிலேயே நான் முற்றாக மறுக்கின்றேன், கருணா எனப்படுகின்ற நான் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன்மை கருதித்தான் போராளிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.</p><p>மட்டக்களப்பில் இருந்து அப்பாவிப் பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு கருணாவே காரணம் என்பது தவறான தகவல் ஆகும், இதனை நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.