இலங்கை-பாக். நட்புறவு சங்க பிரதிநிதிகள்; பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகரை இன்று சந்தித்தனர்

 

இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கத்தின் பிரதிநிகள் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத்தை பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் இன்று சந்தித்தனர்.  

கடந்த 1950 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கமானது, இலங்கையின் பழைமையான சங்கங்களிலுள் ஒன்றாகும். 

இச்சங்கம் இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கிடையில்  இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான  பயனுள்ள அமைப்பாக தன்னை நிலைநிறுத்தியிருக்கின்றது.

இச்சங்கத்தின் தலைவர் இப்தீகார் அஸீஸ் அதன்  வரலாறு உள்ளடங்களாக,  மேற்கொள்ளப்படுகின்ற சமூக நல, நிதி திரட்டல் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.

இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கம் இலங்கை பாகிஸ்தானிற்கிடையில் இருதரப்பு உறவுகளை விருத்திசெய்வதில் கொண்டிருக்கின்ற வகிபாகத்தினை பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் இதன்பொழுது பாராட்டி கருத்து தெரிவித்தார்.

மேலும் இச்சங்கமானது பல்வேறு நடவடிக்ககைள் மற்றும் பரிமாற்றங்களூடாக இருநாட்டு மக்களையும் ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றதென குறிப்பிட்டார்.

விஷேடமாக விழிவெண்படலங்களை பாகிஸ்தானிற்கு அன்பளிப்பு செய்தமை உட்பட இருநாடுகளுக்கிடையில் நிலவுகின்ற  பன்முக இருதரப்பு உறவுகளுக்கு முக்கியமளிப்பதனூடாக இருநாடுகளும் சிறந்த இருதரப்பு உறவினை அனுபவித்து வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வலுவான சங்கமானது எதிர்காலத்திலும் இருதரப்பு உறவுகளில் மேலும் விருத்திகளை மேற்கொள்ளும் என அவர் நம்பிக்கை வெளியிட்டதுடன், அதன் முயற்சிகளிற்கு பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயம் தொடர்ந்தும் தனது ஆதரவினை வழங்கும் என உயர் ஸ்தானிகர் உறுதியளித்தார்.