வேலூர் மாவட்டம் வாலாஜா வன்னிவேட்டில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துக் கொண்டு பேசியதாவது:-
நான், பட்டப்படிப்பை முடித்த ஆரம்ப கட்டத்தில் விவசாயம் செய்தேன். பிறகு டீக்கடை வைத்தேன்.
லயன்ஸ் கிளப்பிலும் செயலாளராக பொறுப்பு வகித்தேன். தமிழ்நாட்டில் கல்வி தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா லேப்டாப் உள்பட 16 வகை கல்வி உபகரணங்களை வழங்கி உள்ளார்.
கல்வித்துறைக்கு மட்டும் ரூ.26 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. முதன்மை கட்சியாக திகழ்கிறது என்று பேசினார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று ஓ.பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி எழுபபினர். அதற்கு, எம்.ஜி.ஆர். உருவாக்கியதும், ஜெயலலிதா ஆசி பெற்ற சின்னமுமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்றார்.