உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி: ரில்வின் சில்வா

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினை காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க தயாராகி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

தேர்தலை ஒத்திவைக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள 6 பேரில் 5 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.இதன் மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் அரசியல் தேவை தெளிவாகியுள்ளது.எல்லை நிர்ணய பணிகள் முடிவடைந்து நீண்டகாலம் எதனையும் செய்யாது, தேர்தலை ஒத்திவைப்பதற்காக இறுதி நேரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.நீதிமன்றத்திற்கு சென்ற சகல அரசியல் கட்சிகளும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என கோரியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மாத்திரம் அவ்வாறு கோராதது அவர்கள் தேர்தலை விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது.ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் பிரிந்து தனித்தனியாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் போது கட்சி பிளவுபடும். இதன் மூலம் ஏற்படும் தோல்வியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியாது.உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்பவில்லை என்ற போதிலும் தேர்தலை நடத்த மக்கள் விடுதலை முன்னணி எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.