இந்தியாவுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொடரில் இலங்கைக்கான வெற்றிவாய்ப்பு குறைந்தளவிலேயே காணப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் , இந்தியாவுடனான இந்த சுற்றுப்போட்டி தொடர்பில் கருந்து தெரிவித்துள்ள முத்தையா முரளிதரன் , இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டித் தொடரில் இலங்கை அணி வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து சர்வதேச அணிகளும் இந்தியாவை தோற்கடிக்க கடுமையாக முயற்சித்து வருவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த 13 வருடங்களில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணிகள் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிப் பெற்றுள்ளன.
தற்போது டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள இந்தியா அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் , இலங்கை அணி வீரர்களின் திறமைகளை இந்தியா சுற்றின்போது இனங்காண முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெற்ற முத்தையா முரளிதரன் 1994ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிளில் விளையாடியுள்ளார்.எவ்வாறாயினும் , அப்போட்டிகள் எதிலும் இலங்கை அணி வெற்றிப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.