சர்வதேச கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபிஃபா அமைப்பின் 6 மூத்த அதிகாரிகள், பல மில்லியன் கணக்கான டாலர்களை லஞ்சமாக கொடுத்ததாகவும் வாங்கியதாகவும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அந்த அமைப்பின் வருடாந்த கூட்டத்துக்காக ஒரு ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது அதிகாலை வேளையில் சுவிட்ஸர்லாந்து போலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு பொறுப்பான துணைத் தலைவர் ஜெஃப்ரி வெப் அவர்களும் அடங்குகிறார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை செய்வதற்காக அவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா கேட்டிருக்கிறது