ஓராண்டு நிறைவடைவதற்குள் லெபனான் பிரதமர் தனது பதவியிலிருந்து ராஜினாமா

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானின் பிரதமராக கடந்தாண்டு டிசம்பர் 18-ம் தேதி சாத் அல் ஹரிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், திடீரென சாத் அல் ஹரிரி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். லெபனான் நாட்டில் ஈரானின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் தான் கொல்லப்பட்டும் அபாயம் இருப்பதால் அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “தியாகியான ரபிக் அல்-ஹரிரி (முன்னாள் பிரதமர்) படுகொலைக்கு முன்னர் நிலவிய சூழலில் இப்போது நாம் வாழ்கின்றோம். என் கொலை செய்ய ரகசியமாக திட்டமிட்டிருப்பதை நான் உணர்ந்துள்ளேன்”, என கூறியுள்ளார்.