அரசியல் கட்சிகள் இணக்கப்பாட்டுடன் வந்தால் சாய்ந்தமருது பிரச்சினைக்கு இப்போதும் என்னால் தீர்வினை வழங்க முடியும் : பைசர் முஸ்தபா

 

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்குவது தொடர்பில் ரிசாதும், ஹக்கீமும் மக்களின் கருத்துக்களைப் பெற்று இணக்கப்பாட்டுடன் வந்தால் இப்பொழுதும் அதற்கான தீர்வை எனக்கு வழங்க முடியும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.அரசியல் கட்சிகள் இணக்கப்பாட்டுடன் வந்தால் கல்முனை மாநகரசபையை நான்காகப் பிரிக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்குவது தொடர்பில் ரிசாதும், ஹக்கீமும் மக்களின் கருத்துக்களைப் பெற்று இணக்கப்பாட்டுடன் வந்தால் இப்பொழுதும் அதற்கான தீர்வை எனக்கு வழங்க முடியும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.அரசியல் கட்சிகள் இணக்கப்பாட்டுடன் வந்தால் கல்முனை மாநகரசபையை நான்காகப் பிரிக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலின்போது கல்முனைக்கும் சாய்ந்தமருதுக்கும் வெவ்வேறான பிரதேச சபைகளை வழங்குவதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.எனினும் அங்கு தற்போது புதிய சூழ்நிலை தோன்றியுள்ளது. அங்குள்ள முஸ்லிம் தலைமைகள் கல்முனை மாநகர சபையை நான்காக பிரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இது தொடர்பில் அப்பிரதேத்திலுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருமிடத்து எமக்கொரு தீர்வை வழங்கமுடியும்.வேட்புமனுக்கள் கோரப்பட்டாலும் இவ்விடயம் தொடர்பில் கலந்தாலோசித்து தேர்தலுக்கு முன் அதற்கு முடிவொன்றைக் காணமுடியுமென நம்புகின்றேன்.சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்குவது குறித்து ஏலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசித்த போது அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.இந்த சூழ்நிலையில் கல்முனை மாநகரசபையை நான்காக பிரிப்பது குறித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதால் இதற்கு தமிழ் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் இணக்கப்பாட்டையும் பெற வேண்டியிருக்கிறது.சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்குவது தொடர்பில் ரிசாதும், ஹக்கீமும் மக்களின் கருத்துக்களைப் பெற்று இணக்கப்பாட்டுடன் வந்தால் இப்பொழுதும் அதற்கான தீர்வை எனக்கு வழங்க முடியும். தனித்து அதற்கான தீர்வை எனக்கு வழங்க முடியாது.நுவரெலியாவுக்கு 3 பிரதேச சபைகளை வழங்கியது சிங்கள, தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து கேட்டமையாலே அதனை வழங்கினோம். அங்கு மக்களிடையே, கட்சிகளுக்கிடையே விரோதம் இருக்கவில்லை.பிரதமர் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையொன்றை வழங்குமாறு அப்போது சொன்னார். நான் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். இந்நிலையில் ஒன்று கேட்டவர்கள் 4 பிரதேச சபைகளைக் கேட்பதால் அங்கிருக்கும் முஸ்லிம், தமிழ் கட்சிகளுடன் கலந்தாலோசித்து இணக்கப்பாட்டின் அடிப்படையில் வழங்குமாறு பிரதமர் எனக்குக் கூறியுள்ளார்.கல்முனை மாநகர சபை பிரிப்பு தொடர்பில் என்மேல் பலிபோடுவதற்கு மக்கள் முன்வர வேண்டாம். எனக்கு சாய்ந்தமருது மற்றும் கல்முனை மக்களிடையே பிரச்சினையை உருவாக்க விருப்பமில்லை.முஸ்லிம் மக்கள் பிரிந்திருப்பது போதும். இந்த அரசாங்கம் மக்களின் விருப்புக்களைப் பெற்றுத்தான் ஆட்சிக்கு வந்தது. ஆகவே மக்களின் கருத்துக்களைப் பெற்றுத்தான் அனைத்துத் தீர்வுகளையும் வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.