சாய்ந்தமருதுக்குத் தலையையும் கல்முனைக்கு வாலையும் காட்டி நன்றாக அரசியல் செய்கிறது காங்கிறஸ்…

                                        காங்கிறஸ் எனும் கபட நாடகன்

 

சாய்ந்தமருதுப் பிரதேச சபைக்குத் தடையாக இருப்பவர்கள் கல்முனை மக்களும் அல்ல.நான்காகப் பிரிப்பதற்கு தடையாக இருப்பவர்கள் சம்மாந்துறை மக்களுமல்ல.நான்காகப் பிரித்து அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு தடையாக இருப்பது பைஸர் முஸ்தபாவும் அல்ல பிரதமரும் அல்ல.

சாய்ந்தமருதில் பிள்ளையைக் கிள்ளி கல்முனையில் தொட்டிலை ஆட்டும் காங்கிறஸின் அரசியல்தான் இதற்குக் காரணம்.

நான்காகப் பிரிந்தால் மூன்று மூஸ்லிம் பிரதேச சபைகளில் உறுதியாக ஒன்றை ரிஷாடின் கட்சி வென்றுவிடும். ரிஷாடைக் கல்முனைக்கு வரவிட்டால் காங்கிறசின் கோட்டை உடைந்து விடும் என்ற பீதியினால் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பகரமாக வைத்து காங்கிஸ் வழமைபோல் பிரதேசவாத அரசியல் செய்துகொண்டிருக்கிறது. சாய்ந்தமருதுக்குத் தலையையும் கல்முனைக்கு வாலையும் காட்டி நன்றாக அரசியல் செய்கிறது காங்க்கிறஸ்.

இந்த நெருப்பில் எது நடந்தாலும் எமக்கு நன்மைதான் என்று மக்கள் காங்கிறஸ் மௌனம் காக்கிறது. இரண்டாகப் பிரிந்தால் நாம் கல்முனையில் ஆதிக்கம் செலுத்தலாம் என்ற கனவில் தமிழ்க் கட்சிகள் ஓரத்தில் நின்று இரண்டு ஊர்கள் கொந்தளிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

சிராஸ் மீராசாஹிபை மேயரிலிருந்து விலக்கி நிஸாம் காரியப்பரைக் கொண்டு வந்ததும் காங்கிறஸ்தான்.

பின்னர் கல்முனையில் நிஸாம் காரியப்பர் கால் பதித்தால் தனது அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்று சாய்ந்தமருதில் பிரதேசவாதத்தைத் தூண்டி டயர்களை எரிக்கவைப்பதும் காங்கிறசின் அரசியல்வாதிதான்.

பிரதமர் பேசும்போது துண்டு கொடுத்து சாய்ந்தமருதுக்கு தனிப் பிரதேச சபை என்று சொல்லவைப்பதும் காங்கிறஸ்தான்.

பின்னர் கல்முனையில் வந்து நான்காகப் பிரிக்காவிட்டால் ராஜனாமா செய்வேன் என்று சூளுரைப்பதும் காங்கிறஸ்தான்

அதாவுல்லாஹ் நான்காகப் பிரிக்க வந்தால் பள்ளித்தலைவரை வைத்து தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதித் தடுப்பதும் காங்கிறஸ்தான்.

பின்னர் அதே பள்ளித் தலைவரை வைத்து நான்காகப் பிரி என்று போராட்டம் நடத்துவதும் அவர்கள்தான்.

நான்காகப் பிரிக்க வேண்டும் என்ற மக்களின் பிரகடனத்தை கையொப்பமிட விடாமல் பள்ளித் தலைவரை தலைமறைவாக்குவதும் காங்கிறசின் அரசியல்வாதிதான்.

பின்னர் நான்காகப் பிரிக்காமல் உங்கள் பிள்ளை அமைச்சர் பதவியில் இருக்கமாட்டான் என்று மக்களை நம்ப வைப்பதும் அவர்கள்தான்.

என்ன ஒரு கபட நாடகம்.

இறுதியாக, இரண்டும் இல்லை,நான்கும் இல்லை.அப்பாவி மக்கள் ஒருவர் மேல் ஒருவர் வெறுப்புக் கொண்டது மாத்திரம்தான் மிச்சம்.அந்த வெறுப்பை வைத்து அரசியல் செய்து கொண்டு காலம் கழிப்பது.இதுதான் காங்கிறஸின் அரசியல்.அம்பாரை மாவட்டத்தை பிரதேசவாதத்தால் பிரித்துச் சுக்கு நூறாகியிருப்பது இவர்கள்தான்.இதனைச் சரிப்படுத்துவதற்கு யுகங்கள் ஆகும்.

அன்று சொன்னதைத் தான் மீண்டும் சொல்ல விளைகிறேன்.

கல்முனை சிவில் அமைப்புகளும், சாய்ந்தமருது சிவில் அமைப்புகளும் ஒன்றாகச் சேர்ந்து இதனை எதிர்கொள்ளாமல் இருவரும் பிரிந்து இருக்கும் வரைக்கும் இதற்கு முடிவு காண முடியாது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றாக நடக்கும் போல் இருக்கிறது.இரண்டு ஊர்களும் ஒன்றாகச் சேர்ந்து காங்கிறஸை அடித்து விரட்டுங்கள்.எல்லாம் ஒரு கணத்தில் சரியாகிவிடும்.

பிரச்சினை இங்கு பிரதேச சபை அல்ல. காங்கிறஸ்.
எல்லாம் ஊர்களிலும் வழுக்கிக் கொண்டு கல்முனையில் மட்டும் கொஞ்சம் தொங்கிக் கொண்டிருக்கிறது.இரு ஊரும் சேர்ந்து எட்டி உதைத்தால் காங்கிறஸ் விழுந்துவிடும்.காங்கிறசின் வீழ்ச்சியில் இருந்துதான் எமது முஸ்லீம்களின் எழுச்சி ஆரம்பிக்கும்.

பிரதேச சபைப் பிரச்சினையை தற்காலிகமாக நிறுத்துவிட்டு காங்கிறசின் பிரச்சினையை முதலில் எடுங்கள்.

 

Raazi Muhammadh Jaabir