ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர்கள் தாம் நிரபராதி என நிரூபிக்க இராஜினாமா செய்தாலும், அரசாங்கம் வீழப்போவதில்லை என, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் போது, ஊழல் குற்றம்சுமத்தப்பட்ட அமைச்சர் ஒருவர், தான் நிரபராதி என நிரூபிக்க பதவி விலகினால் சிலர் அரசாங்கம் கவிழப் போவதாக எண்ணுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தௌிவாவது அரசாங்கம் எவ்வளவு வலுவானது என்பதும் ஜனநாயகத்தை எவ்வாறு செயற்படுத்துகிறது என்பதுமே எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பௌத்தர்களைப் போல நல்லிணக்கத்தை செயற்படுத்தும் வேறு குழுவினர் இல்லை எனவும் அமைச்சர் மங்கள சமரவீர, குறிப்பிட்டுள்ளார்.