பூமி கோளத்தில் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா முழுவதும் பனி பாறைகளால் நிரம்பி உள்ளன. உலக வெப்பமயம் அதிகரிப்பு காரணமாக பனிபாறைகள் உருகியும், அவை உடைந்து சிதறியும் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் அண்டார்டிகாவின் மேற்கு பகுதியில் சுமார் 250 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட ராட்சத பனிபாறை ஒன்று உடைந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
அந்த பாறை கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் இழுத்து வரப்பட்டு பின்னர் உருகி விடும். இதனால் கடல் நீர் மட்டம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டில் இதுபோன்று மிகப்பெரிய பனி பாறை உடைந்து வருவது 2-வது தடவை ஆகும். 2000 ஆண்டுக்கு பிறகு 5 தடவை இதேபோல் பெரிய பனி பாறை உடைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 4,500 கோடி டன் பனி கட்டிகள் உடைந்து கடலில் கலந்து வருகின்றன. ஒவ்வொரு 8 ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒரு மி.மீட்டர் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.