வித்தியா கொலை வழக்கு – தண்டனைக்குப் பிறகும் தாம் நிரபராதிகள் என கண்ணீர் மல்கிய குற்றவாளிகள்

 

வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களில் முதலாம், ஏழாம் இலக்க சந்தேக நபர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மிகுதி ஏழுபேரும் குற்றத்தோடு தொடர்புபட்டவர்களென்று உறுதி செய்து மரணதண்டனை வழங்கபட்டுள்ளது.

வித்தியா கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளிடம், உங்களுக்கு ஏன் மரணதண்டனை வழங்கக்கூடாது? என்று நீதிபதிகள் சார்பில் குற்றவாளிகளிடம் கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த குற்றவாளிகள் தாம் இந்தக் குற்றத்தினை செய்யவில்லை என அவர்கள் அனைவரும் முற்றாக மறுத்தனர்.

நிரபராதிகளாகிய தாம் அநியாயமாக தண்டிக்கப்பட்டுவிட்டதாக நீதிபதிகள் முன்னாலேயே கண்ணிர் மல்க தெரிவித்தனர்.