இந்தியா அறிஞர்களை உருவாக்குகிறது, ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது ஐ.நா.வில் சுஷ்மா

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், இந்தியா அறிஞர்களையும், டாக்டர்களையும், உருவாக்குகிறது. ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது. இன்றைய 21-ம் நூற்றாண்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஐ.நா.சபை மாற்றியமைக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐ.நாவில் சுஷ்மா சுவராஜின் பேச்சுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் குறித்து தனது கருத்தை சுஷ்மா ஜி வலிமையாக பதிவு செய்துள்ளார். அவரது உரையால் இந்தியா உலக அரங்கில் பெருமை பெற்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் சுஷ்மா சுவராஜ் பேச்சுக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.நா.வில் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை நன்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலையை வெளிப்படுத்தியதற்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.