அதிபர் டிரம்பின் முடிவுக்கு தலிபான் அமைப்பினர் கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தானில், தலிபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆப்கானிஸ்தானுக்கு ஆதாரவாக அமெரிக்கா உதவி வருகிறது. 
இந்நிலையில், இன்று 4 ஆயிரம் அமெரிக்க துருப்புகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். மேலும், அவர்கள் காலவரையின்றி போர் முடிவடையும் வரை ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.
டிரம்பின் இந்த முடிவுக்கு ஆப்கான் பிரதமர் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால், டிரம்பின் இந்த உத்தரவிற்கு தலிபான் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜகிபுல்லா முஜாகித் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானில் போரை தொடர்வதற்கு பதிலாக, அமெரிக்கா தனது படைகளை திரும்பப் பெற யோசிக்க வேண்டும். 
எங்கள் நாட்டில் கடைசி ஒரு அமெரிக்க ராணுவவீரர் இருக்கும்வரை, நாங்கள் எங்கள் யுத்தத்தை தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.