பெருந் தலைவர் அஷ்ரபின் காலத்துக்குச் செல்ல விரும்பும் கிழக்கு மக்கள் !

 

கிழக்கின் மானம் காத்த தன்மானச் சிங்கம் மர்ஹூம்  அஷ்ரபினால் முஸ்லிம்களுக்கு  அரசியல் முகவரி கிடைத்த பொற்காலத்திற்கு பின்னரான  17 வருட காலப்பகுதியில் ஹக்கீமினால்  பெயர் சொல்லுமளவிற்கு எதுவுமே  செய்யப்படவில்லை என்றாலும், இருப்பவைகளையாவது  காப்பாற்ற வில்லையே என்ற ஆதங்கத்துடனான ஆத்திரம் கிழக்கு வாழ் மக்களிடம் அதிகமாக காணப்படுகிறது.   ஒவ்வொரு தேர்தலிலும்,   தலைமுடியை  வெட்டுவது போல், கட்சியில் இருக்கும் மூத்த போராளிகளை வெட்டி விடுவதும், புதிய முடியாக  உள் வாங்கப்படுகின்ற போராளிகளை கட்சியின் நடவடிக்கைகளுக்கு  பயன்படுத்துவதும் ஹக்கீமுக்கு  புதிய விடயமுமல்ல,   கட்சிப் போராளிகளுக்கு இது பழைய விடயமுமல்ல. ஹக்கீமின் தலைமைப் பதவிக்கு  உள்ளார்ந்த ரீதியாக போட்டிகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக உச்சவரம்பு மேலாதிக்க யுக்தியைப் பயன்படுத்தி, ஹக்கீம் தனது    பதவியை பாதுகாக்கும்அதிகார மையப்படுத்தல்  கையாடல் திட்டத்துக்கு, மக்களை தொடர்ந்து பகடைக் காய்களாக   பயன்படுத்துவதால்  இன்று பாரிய கஷ்டத்துக்கும் சங்கடத்துக்கும்  முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு கிழக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்  .

சாணக்கியமான முறையில், புதிய வியூகம், சரியான நேரத்தில் சரியான முடிவு, இறுதி நேரத்தில் உள்வாங்கி, லாவகமாகபக்குவமாக கையாண்டு, சோரம்  போன்ற மாயாஜால  வார்த்தைகளால்  உண்மைகளை மழுப்புவதோடு,   மக்களை  குழப்புவதும், தேர்தலுக்குப் பின்  ஹக்கீமை நம்பி ஏமாந்து விட்டோமே என மக்கள் குழம்புவதும் ஹக்கீமுக்கும் மக்களுக்கும் பழகி புளித்துப் போன விடயமாகி விட்டது. இதனால்  ஹக்கீமை நம்பி தோற்றுப் போன கிழக்கு வாழ் மக்கள் நல்ல நேர்மையான  அரசியல்வாதிகளைக் கூட  நம்ப முடியாத அளவிற்கு   ஹக்கீமால் வெறுப்படைந்து காணப்படுகின்றனர்

இவ்வளவு காலமும்  பெரும்பான்மை முஸ்லீம்களின் ஆதரவினைப் பெற்ற முஸ்லீம் காங்கிரசுக்கு, கிடைக்கும் கௌரவத்தினையும், மதிப்பினையும் மர்ஹூம் அஷ்ரபினை மனதில் வைத்துக் கொண்டு,   ஹக்கீமுக்கு கொடுத்துப்  பார்த்தால்,    பேரினவாதக் கட்சிகளின் அனுசரணையும், ஆதரவும்  அதிகமாக   இருந்தும் சமூகத் தேவைப் பூர்த்திகளை விட சுயதேவைப் பூர்த்திகளுக்கே  ஹக்கீமால் அதிக  முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனைய சில முஸ்லீம்  கட்சிகளுக்கு   பேரினவாதக் கட்சிகளின் அனுசரணையும், ஆதரவும் மிகவும் குறைவாக காணப்பட்ட நிலையிலேயே மக்களுக்கான சேவைகள் அனைத்தும் செய்யப்படுகிறதுஇதைப் புரிந்து கொண்ட பேரினவாதக் கட்சிகள் இது தான் சந்தர்ப்பம் என ஹக்கீமை பெரிதாக்கி ஏனைய முஸ்லீம் தலைவர்களை சிறிதாக்கியது மட்டுமல்லாமல்  ஹக்கீமின் பல பலவீனங்களை பேரினவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக்க கொண்டதோடு, ஹக்கீமுக்குத் தான் முதலிடம் உங்களுக்கில்லையென ஏனைய முஸ்லீம் தலைவர்களையும், அவர்களால் செய்யப்பட்ட     உதவிகள் அடங்கிய சேவைகளையும்   முடக்கி, முஸ்லீம்களுக்கு எதுவுமே இல்லாது செய்து விடுகின்றனர். மேலும்  ஹக்கீமை உதாரணமாகக் கொண்டு சில பேரினவாதிகளினால் ஏனைய முஸ்லீம் அரசியல்வாதிகள் இடை போடப்படுவதால் மக்களுக்காக இயங்கக் கூடிய நல்ல அரசியல்வாதிகள் கூட ஹக்கீமைச் சுட்டிக் காட்டி முடக்கப்பட்ட சந்தர்ப்பங்களும்  அதிகமாக காணப்படுகிறது.

பெருந் தலைவர்  அஸ்ரப்   இன்று இருந்திருந்தால் ஒலுவில்  துறைமுகம் ஒரு பாரிய தொழில் பேட்டையாக உருவாகியிருப்பதுடன், வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள பிற மாகாணங்களில் இருந்து மக்கள் கிழக்கிற்கு படையெடுத்திருப்பார்கள், தென்கிழக்கு  பல்கலைக் கழகத்தில் வைத்திய பீடமும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும், சிக்கலில் சிக்கியுள்ள  65000 கும் அதிகமான   ஏக்கர் காணிகள் ஏற்கனவே விடுவிக்கப் பட்டிருப்பதோடு, மாணிக்க மலைக்கு எந்தப் பிரச்சனைகளும் வந்திருக்காது,    வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி  நிலையம்இளைஞர் சேவைகள் மன்றம் என்பன கல்முனையை விட்டுப்  போக வாய்ப்பில்லை, மர்ஹூம் அஷ்ரபின் தாரக மந்திரமான, இலங்கையின் 26 வது நிர்வாக மாவட்டமாக1948 ம் ஆண்டு இலங்கைக்கு ஆங்கிலேயரினால் சுதந்திரம் வழங்கப்பட்ட காலப் பகுதியில்   கொடுக்கப்பட்டிருந்த தனி முஸ்லிம்களை கொண்ட கல்முனை  மாவட்டத்தினை  ஒத்த   “கரையோர மாவட்டம்தற்போது மேற்கொள்ளப்படுகின்ற புதிய அரசியல் தேர்தல் முறை மாற்றத்தின் போதே ஏற்படுத்தப்பட்டிருக்கும், முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 தாண்டியிருக்கும், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் தொடர்ந்து முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினராகவே இருப்பார்.   புதிதாக  முஸ்லீம் கட்சிகள் வளர்ந்திருக்காது, முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளும், பிரச்சாரங்களும் தோன்றியிருக்காது,   “தாருஸ்ஸலாம்சொத்துக்கள் கொள்ளையிடப்படாது பாதுகாக்கப்பட்டு, வளர்ச்சி கண்டு    பல மடங்குகளாக பெருகி  மக்கள் அதன் பலன்களை  பெற்றிருப்பார்கள்  என மர்ஹூம் அஷ்ரபின் மகிமைகளை கூறிக் கொண்டே போகலாம். ஆனால் மர்ஹூம் அஷ்ரபை போன்ற ஒரு தலைமை, அப்படியொரு பொற்காலம் எங்களுக்கு இனிமேல் கிடைக்குமா? என இன்று கிழக்கில் மட்டுமல்ல நாடு பூராகவும் ஏங்காதவர்களே கிடையாதுஅந்தளவிற்கு பொய்களும், ஏமாற்றங்களும், தில்லு முல்லுகளும் நிறைந்த ஹக்கீமின் பம்மாத்து அரசியல் மக்களின் மனங்களை  வாட்டி வதைத்து நோகடித்துக் கொண்டிருக்கிறது.  

கிழக்கிற்கு சொந்தமான தலைமைத்துவம், கெபினெட்  அமைச்சு உட்பட  உள்ளூராட்சிமன்ற, மாகாணசபை, பாராளுமன்றம் போன்ற  கிழக்கின் சகல வெற்றிகளையும்  கிழக்கு மக்கள் ஹக்கீமுக்கு  தாரைவார்க்கவில்லையா? கிழக்கு மக்கள் ஹக்கீமுக்கு இவைகளை கொடுத்ததால் தான் சொத்திலும், சுகத்திலும், ராஜபோக வாழ்க்கையிலும் ஹக்கீம் தன்னிறைவு கண்டுள்ளார், அனைத்தையும் கொடுத்து   ஹக்கீமை இந்த இடத்துக்கு கொண்டு வந்த கிழக்கு வாழ்  மக்களுக்கு ஹக்கீம் செய்த கைமாறு தான் என்ன? சொத்து சுகத்துக்கு அடிமையான ஹக்கீமைப் போன்ற மனிதர்களால் சமூகத்தை சுரண்ட முடியுமே தவிர, நல்லவைகள் எதனையும் செய்யமுடியாது, ஹக்கீமின் மனைவி, பிள்ளைகள்   மூன்று வருடங்களுக்கு மேலாக  ஹக்கீமுடன் எந்த உறவுமில்லாது குமாரியின் பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்த காலப் பகுதியில்இப்பிரச்சனைக்குக்  கூட முகம் கொடுக்க முடியாது இருந்த ஹக்கீமால் எங்களது கிழக்கு மக்களின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முடியுமா

கம்புக்கு புடவையை சுற்றிவைத்தாலும் அதனைச் சுற்றிவரும்  ஹக்கீமைப் போன்ற பலவீனமானவர்களினால் பல குடும்பங்களுக்கு  விவாகரத்து பெற்றுத் தர முடியுமே தவிர, இவரிடமிருந்து  எந்த சமூக சேவைகளையும் எதிர்பார்க்க முடியாது, சேற்றைக் கண்டால் மிதித்து, தண்ணீரை கண்டால் கழுவும் குணம் கொண்ட  ஹக்கீம்குமாரியின் கொலை, தாருஸ்ஸலாம் கொள்ளை, கட்சி தாவிப் பணம் பெற்று ஹஸனலியால் வந்த தொல்லைஹக்கீமின் கொள்கையில் இனி கிழக்குக்கு இடம்  இல்லை  போன்ற பிரச்சனைகளில் இருந்து எப்படித் தப்பலாம் என வழி தெரியாது   தவித்துக் கொண்டிருக்கும்  ஹக்கீம் எமது கிழக்கு மக்களுக்கு வழி காட்டுவாரா? குமாரிகளைப் போல், நிஸாக்களைப் போல் எங்களது  கிழக்கு மாகாண பெண்களையும் பார்க்க முனைவதை எங்களால் அனுமதிக்க முடியாது. கிழக்கு வாழ் முஸ்லீம்களை முட்டாள்களாக, மடையர்களாக நினைத்துக் கொண்டு தொடர்ந்தும் ஏமாற்றலாம் என கிழக்கை காட்டிக் கொடுப்போரின் சகவாசத்துடன் தப்புக்கு கணக்குப் போட்டு செயற்படும் ஹக்கீமுக்கு, குறிப்பாக கிழக்கு மாகாண கற்புள்ள  பெண்கள் உட்பட சகலரும் எதிர்வரும் தேர்தலில் சரியான ஒரு பாடத்தினைப் புகட்டுவார்கள். கிழக்கு மாகாண மக்களிடம் மானம் மரியாதையுடன், எதிர்கால சந்ததிகளின் சுதந்திரமான  வாழ்க்கையை உள்ளடக்கிய   பிரதேச அபிவிருத்திக்கும்  முன்னேற்றத்துக்குமான நம்பிக்கைகள் மாத்திரமே மிகுதியாக உள்ளபடியால்இதற்கு மேலும் இழப்பதற்கும், கொடுப்பதற்கும்   கிழக்கு வாழ் மக்கள்  எவருமே இனித் தயாராக இல்லை,

இந்த அரசின் 100 நாட்கள் வேலைத்  திட்டத்தில் ஆணைக்குழு அமைத்து மீட்டுத் தருவதாக  ஹக்கீமால் வாக்குறுதி அளிக்கப்பட கரும்புச் செய்கை காணி, பொத்துவில் விவசாயக் காணி  மற்றும் ஏனைய காணிகள் மீட்கப்பட்டு விட்டதா? அல்லது ஆணைக்குழு தான் அமைக்கப்பட்டதா? கேட்பார்    அற்று  காடாக காட்சியளிக்கின்ற   சவூதி அரசினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட சுனாமி வீட்டுத்திட்டம்  தொடர்பாக  பேச வேண்டியவர்களுடன் பேசி ஹக்கீம் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தாரா (இந்த விடயத்தில் அதாவுல்லா, றிசாட் பதுர்டீன் போன்றவர்களும் குற்றவாளிகளே)    ஒலுவில் துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டதா? ஹக்கீமால் பெற்றுத் தருவதாக தேர்தல் காலங்களில்  வாக்குறுதியளிக்கப்பட்ட சாய்ந்தமருது, மூதூர், வாழைச்சேனை, தோப்பூர்  போன்று இன்னும்  சில உள்ளூராட்சி மன்றங்கள் எங்களுக்கு கிடைத்து விட்டதா? ஹக்கீமால் தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட தேசிய பட்டியல் எம்.பி அட்டாளைச்சேனை உட்பட சில பிரதேசங்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டதா?  ஹக்கீமின்  டி. என் .  யை பரிசோதித்து வேறு பிரச்சனைகள்  வருமுன் ஹக்கீமின் நட்புக் கட்சியான ரி. என் .  யோடு  பேசி  வடக்கு முஸ்லீம்களின் குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாண முஸ்லீம்   மக்களின் மீள்குடியேற்ற பிரச்சனைகளை  இலகுவாக தீர்ப்பேன் என சவால் விட்ட ஹக்கீம் மறந்து விட்ட வாக்குறுதிகளை ஞாபகப்படுத்துவாரா? இது போல் ஆயிரக் கணக்கான வாக்குறுதிகள், சொல்லும் போதே காற்றுடன் காற்றாய் இல்லாமல் போய் விட்டது. மர்ஹூம் அஷ்ரப் செய்தவைகளை பாத்தடித்தாவது சேவைகளை செய்யத்  தெரியாத ஹக்கீம், மர்ஹூம் அஷ்ரபின் போட்டோவையும், கட்சிப் பாடலையும், மரச் சின்னத்தையும்  வைத்து, கிழக்கு மக்களை ஏமாற்ற என்றுமே தவறியதில்லை

இன்று முஸ்லீம்களுக்கு பல பக்கங்களினாலும்    பாரிய பிரச்சனைகள்,   திட்டமிட்ட  அடக்கு முறைகள், மலிந்து விட்ட சிக்கல்கள், இனம் புரியாத தொந்தரவுகள் இவைகளை தடுத்து, முகம் கொடுத்து சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களிடம் அல்லது   நபர்களிடம் பேசவேண்டிய ஹக்கீம்  அதைச் செய்யாது இப்பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து பேசுகின்றவர்களை மலினப் படுத்துகின்ற வேலைகளை சிறப்பாக  செய்து கொண்டிருக்கின்றார். முஸ்லிம்களுக்கு பாதகமான  எந்த பிரயோசனமும் இல்லாத புதிய அரசியல் தேர்தல் முறை மாற்றத்துக்கு சாதகமாக  குரல் கொடுப்பதோடு, பாராளுமன்றத்தில் அதற்கு    ஆதரவாக கை தூக்கவும்  தயாராக இருப்பதுடன், கரையோர மாவட்டம் அல்லது முஸ்லீம் மாகாணம் அல்லது முஸ்லீம் தேசியம் அல்லது முஸ்லிம்களுக்கான நிர்வாக அலகு என எதுவுமே இல்லாத அரசியல் தீர்வினை நோக்கிய இலக்குக்கு ஆதரவாக கைச்சாத்திடவும் திரை மறைவில் பேரம் பேசும் ஹக்கீம் எந்த அஜந்தாவிற்கு இயங்குகின்றார் என்பதை ஹக்கீமுக்கு மனச் சாட்சி என ஒன்றிருந்தால் அதைக் கேட்டுப் பார்க்கட்டும்

முஸ்லீம் கூட்டமைப்பு”  சில பிரமுகர்களின் கூட்டு எனவும், இக்கூட்டினால் முஸ்லீம் காங்கிரஸ் ஹக்கீம் அணியினை எதுவும் செய்ய முடியாது எனக்கூறி முஸ்லீம் காங்கிரஸ் ஹக்கீம் அணிமுஸ்லீம் கூட்டமைப்பில் இணையாது என   தனது முடிவை பகிரங்கமாக கூறியுள்ள ஹக்கீம்பல பிரச்சனைகளில் சிக்குண்டுள்ள முஸ்லீம்களை ஓரணியாக சேர்ந்து நின்று பாதுகாக்க தயாரில்லாத நிலையில், இன்று மாற்றத்தை விரும்புகின்ற கிழக்கு முஸ்லீம்கள் எப்படி இந்த புதிய  “முஸ்லீம் கூட்டமைப்பினைநிராகரிப்பார்கள்.. எந்த விதத்திலும் மக்களுக்காக போராட ஒரு அடியினையாவது எடுத்து வைக்காத ஹக்கீமை நம்பி மோசம் போவதை விடமுஸ்லீம் கூட்டமைப்பையும், அதன் முன்னோடிகளான ஹஸனலி, அதாவுல்லா, றிசாட் பதுர்தீன்  , பஷீர் சேகுதாவூத், அன்ஸில்  ஹிஸ்புல்லா, ரகுமான், தாஹிர், நஸார் ஹாஜி போன்ற சமூகத்துக்காக குரல் கொடுத்து, பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க தயாராகவுள்ளவர்களை நம்பி பின்னால் செல்ல மக்கள் தயாராக உள்ளனர்ஆனால்  இக்கூட்டமைப்பில் இணைகின்றவர்களும் மக்களுக்காக தியாகங்களை செய்ய முன்வரவில்லையெனின் அவர்களையும் ஹக்கீமோடு சேர்த்து தூக்கியெறிய மக்கள் தயங்க மாட்டார்கள் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது

 ஒன்றுமே இல்லாத முஸ்லீம் காங்கிரஸ் ஹக்கீம் அணியில் தனக்கு ஒரு பதவி கிடைத்துள்ளது எனும் போதையால் முழு கிழக்கினையும் ஹக்கீமுக்கு தாரை வார்க்க தயாராகவுள்ள   யகியா கான் போன்றோர்கள், கிழக்கின் மண்வாசனையை மறந்து வாயில் வருகின்ற வார்த்தைகளை அறிக்கைகளாக உளறுவதை விட சற்று தெளிவாகிநிதானமாக   சிந்தித்துப் பார்த்தல் உண்மைகள்  விளங்கும்.

மர்ஹூம் அஸ்ரப் கொடுத்த வாக்கின் படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒரு சபையில் தோல்வி கண்டதால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச்  செய்தார்அது தலைவர் மர்ஹூம்  அஸ்ரப்   “தங்கம்என்பதற்கு அடையாளம். ஆனால்   இந்த பிரமுகர்களின்  முஸ்லீம் கூட்டமைப்பினால் முஸ்லீம் காங்கிரஸ் ஹக்கீம் அணியினை  அசைக்க முடியாது என சவால் விட்ட ஹக்கீமால், முஸ்லீம் காங்கிரஸ் ஹக்கீம் அணியின்  அதிகாரத்தில் இருக்கின்ற உள்ளோராட்சி  மன்றங்களில் ஒன்று கூட்டமைப்புடன் எதிர்த்து போட்டியிட்டு  தோல்வி கண்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்ய தயார் என    ஹக்கீமால்  சவால் விட முடியுமா?

அமீர் மௌலானா