கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு பிரித்தானிய உயர் ஸ்தானிகர் இராணுவத்திடம் கோரிக்கை

வடக்கில் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டம்ரிஸ் இராணுவத்திடம் கோரிக்கை விடுத்துள்ளா்.

இலங்கை பாதுகாப்புப் படைகளின் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

எனினும் பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கு, இலங்கையின் பாதுகாப்பு விடயங்களில் தலையிட முடியாதென உயர்மட்ட பாதுகாப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.