இலங்கை அர­சாங்கம் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக செயற்­பட உறு­தி­பூண்­டுள்­ளது: அமைச்சர் மங்­கள

 

சர்­வ­தேச நாடு­களும், நிறு­வ­னங்­களும் இலங்­கைக்கு தொடர்ந்தும் உதவ முன்­வ­ரு­மானால் நிலையான சமா­தா­னத்­தையும் தொலை­தூர இலக்­கு­க­ளையும் விரைவில் அடைய முடி­யு­மென நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். மேலும் இலங்­கையின் சமா­தான குறி­காட்­டி­களை மதித்து அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும் சர்­வ­தேச நாடு­களின் உணர்வை மதிப்­ப­தா­கவும் தொடர்ந்தும் இலங்­கையின் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளுக்கு அனை­வரும் உதவ முன்­வர வேண்­டு­மெ­னவும் அவர் கேட்­டுக்­கொண்டார்.

பணம் தூய்­மை­யாக்கல் தொடர்­பான ஆசிய பசுபிக் வலய நாடு­களின் 20ஆவது மாநாடு நேற்று ஹில்டன் ஹோட்­டலில் ஆரம்­ப­மா­னது. இந்­நி­கழ்வில் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர, மத்­திய வங்கி ஆளுநர் இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி உள்­ளிட்ட பலரும் கலந்­துக்­கொண்­டனர். இதன்­போது சிறப்­புரை ஆற்­றிய நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மேலும் தெரி­விக்­கையில்,

ஆசிய பசுபிக் வலய நாடு­களின் பணம் தூய்­மை­யாக்கல் தொடர்­பான மாநாடு இலங்­கையில் நடை­பெ­று­வது பெரு­மைக்­கு­ரிய விட­ய­மாகும்.  41 உறுப்பு நாடு­களும் பல்­வேறு அரச சார்பு மற்றும் அரச சாராத நிறு­வ­னங்கள் பங்­கு­கொள்­வதன் மூலம் இலங்கை பல முன்­னேற்­ற­க­ர­மான அனு­ப­வங்­களை அடைந்­து­கொள்ள முடியும்.

உலக நாடு­களும் பணம் தூய்­மை­யாக்கல் மற்­றும் பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி­யி­டலை கட்­டுப்­ப­டுத்த ஒன்­றி­ணைந்­துள்­ளது. ஆசிய பசுபிக் வலய நாடு­களின் பொரு­ளா­தார வளம் குறித்த இரு துறை­க­ளுக்கும் அவ­சி­ய­மா­ன­தொன்­றாகும். குறிப்­பாக அங்­கத்­துவம் வகிக்கும் நாடுகள் நிதி­யியல் கட்­டுப்­பாட்டு கொள்­கைகள் முறை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டும.

தற்­போது இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள சமா­தா­னத்தை, பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான சவாலை நிலை­யாக காண்­டு­செல்ல வேண்டும். இதற்கு சந்­வ­தேச நாடுகள் இன்று ஒன்­றி­ணைந்­துள்­ளதன் மூலம் அதற்­கான அர்ப்­ப­ணிப்பை என்னால் உணர முடி­கின்­றது.

பயங்­க­ர­வாத்த்­துக்கு எதி­ராக நிதி­யிடல், போதைப்­பொருள் கட்­டுப்­பாடு,, பணம் தூய்­மை­யாக்கல் ஆகிய சவால்­மிக்க பகு­தி­களில் நமது முழு­மை­யான செயற்­றி­றனை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

இலங்­கையின் வர­லாறும் பாரம்­ப­ரி­யங்கள் கட்டமைக்கப்பட்டவையாகும். அர்ப்பணிப்பு மிக்க சமூகத்தின் மூலமே சமாதானத்தையும் சிறந்த ஆட்சியையும் உருவாக்க முடியும்.

அதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர். பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் நாம் அடைய வேண்டிய இலக்குகளை தெளி வாக வரையறுக்க முடிந்துள்ளது.