எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையம் பிரதமரினால் திறந்து வைப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் இணைந்து செயற்படுத்தும் எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07) திறந்து வைத்தார். 
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் அழைப்பின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஸ்ரீ விடோவதி, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், மன்சூர், சார்ள்ஸ் நிர்மலநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2,200மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இக்கருத்திட்டம் பூர்த்தியடையும் போது 55 ஆயிரம் மக்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்து