தெரு விளக்கில் மறைந்து இருக்கும் தேசியப்பட்டியல்
அட்டாளைச்சேனையின் காலையும் தலையையும் வெட்டி நடுப்பகுதியில் மட்டும் 30 தெருவிளக்குகள் போடபட்டுள்ளன இதனால் ஊரின் எல்லையின் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என மக்கள் சிந்திக்கின்றனர்
அட்டாளைச்சேனை ஊர் என்பது மிகவும் நீண்ட பிரதேசம் அதில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் 30 தெரு விளக்குகள் போடபட்டதன் நோக்கம் என்ன ? இப்படியான அரை குறை அபிவிருத்தியை செய்து ஊரை அசிங்கப்படுத்தி தேசியப்பட்டியல் என்ற பூதத்தை படுகுழியில் போடும் ஹக்கிமின் அவர்களின் தந்திர அபிவிருத்தி என மக்கள் வீதியில் நின்று கொண்டு பேசுகின்றனர்.
ஏதோ குறிப்பிட்ட பகுதியில் வெளிச்சம் இல்லை அதனால் யானைகள் ஊருக்குள் வருகின்றது அந்த தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்க 30 தெருவிளக்கு என்று ஊள்ளுர் அரசியல்வாதிகள் சொன்னாலும் நாம் அச்சரியப்பட தேவையில்லை முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் என்பது ஏமாற்று அரசியலாகவே உள்ளது இதற்கு இனியும் மக்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்
அட்டாளைச்சேனை மண்னை அழகுபடுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் டாக்டர் ஜலால்தீன் அவர்களுக்கு பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக் கொள்ள அந்த மக்கள் ஒற்றுமையாக அரசியல் நகர்வுகளை செய்யும் போதும் அது சானக்கியன் என்று அந்த மக்கள் போற்றும் ஹக்கிமால் திட்டமிட்டு பல வருடமாக தடைசெய்யப்படுகின்றது என்பதை அந்த ஊர் மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர் ஆனால் அந்த உண்மையை ஊரின் அபிவிருத்தியில் கவனம் இல்லாமல் தனது சொகுசு வாழ்க்கைக்காக அரசியல் கடலில் சுழியோடியாக இருப்பவர்களால் மறைக்கப்பட்டு வருகிறது அவர்களை விரட்டினால் மட்டுமே அட்டாளைச்சேனை மக்கள் தங்களது நீண்ட கால கனவான பாராளுமன்ற உறுப்பினரை பெற முடியும் அதற்கு ஹக்கிமை ஆதரித்தால் கிடைக்காது கிடைக்க போவது கஞ்சி கோப்பை மட்டும் தான்.
இன்று நடைபெற இருக்கும் இப்தார் நிகழ்வில் ஹக்கீம் அவர்களிடம் தேசியப்பட்டியல் விடயமாக மக்கள் இறுதி முடிவை கேட்கவுள்ளதாக அறிய முடிகிறது ஆனால் அந்த கேழ்வியை தடுக்க தெருவிளக்கில் ஒழித்து வைக்கப்பட்டுள்ளது தேசியப்பட்டியல் .ஒளியை காட்டி அரசியல் இருளில் மக்களின் பார்வையை திசை திருப்பும் நரியின் தந்திரமே 30 தெருவிளக்கு இதற்கு மக்கள் தலைசாய்க்காமல் தபால் கந்தோர் அருகில் வழங்கிய வக்குறுதியை நிறைவேற்றும்படி ஹக்கிமிடம் இறுதியாக கேளுங்கள்.
இன்று தேசியப்பட்டியல் என்று கேட்பவருக்கு யார் தகுதி என்று பதில் கூறவுள்ளார் ஏன் மக்களின் ஆதரவுடன் மாகான சபையில் சுகாதார அமைச்சராக இருக்கும் நசீர் தகுதியில்லையா? என்று கேளுங்கள் ஹக்கிம் ஒரு சட்டத்தரனி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர் அதனால் இப்தார் முடிந்து நலமுடன் வீடு போய் சேரும் வரை தேசியப்பட்டியல் தருவார் இது இன்றைய நாடகம்.
எனவே டாக்டர் ஜலால்தீன் அவர்களுக்கு பிறகு பல அரசியல்வாதிகளை கண்ட மக்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை காணமுடியவில்லை அது இந்த ஹக்கிம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருக்கும் வரை முடியாது அதனால் அரசியல் பாதையை மாற்றினால் மட்டும் நிச்சயம் பாராளுமன்ற உறுப்பினரை அட்டாளைச்சேனை மண் கண்டு கொள்ளும் வேறு வழியே இல்லை அதனால் எதிர்வரும் தேர்தலில் இன்று அம்பாறை மாவட்ட பெரும்பாலான மக்கள் விரும்பும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்துக்கு வாக்களித்து அதன் தலைவர் சமுதாய அரசியல்வாதி அமைச்சர் றிசாத் அவர்களின் வழிகாட்டலில் பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதற்கு அட்டாளைச்சேனை மக்கள் முன் வர வேண்டும்.
ஜெமீல் அகமட்