பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரரை ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் எழுந்த சர்ச்சைகளுக்கு பின்னால் ஞானாசார தேரர் உள்ளார் என ராஜித கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் ஞானசார தேரரை ஒப்பிட முடியாது.
விக்னேஸ்வரன் கூறும் சிலவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும், சிங்கள சமூகத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்குமாறு அவர் ஒரு போதும் குறிப்பிட்டதில்லை.
ஆனால்,ஞானசார தேரர் அவ்வாறு இல்லை, முஸ்லிம் சமூகத்தை தாக்குவதற்கு பின்னால் செயற்பட்டு வருகின்றார். உயிர் அச்சுறுத்தலுக்கு பயந்து ஞானசார தேரர் மறைந்து இருக்கின்றார் என்றும் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஞானசார தேரரை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.