அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்…

உத்தேச புதிய அரசியலமைப்பு சட்ட திருத்தம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடும் அதிகாரம் அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில், அரசியலமைப்பு சட்ட திருத்தம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த வேறு அமைச்சர்களுக்கு கருத்துக்களை வெளியிட முடியாது என அந்த கட்சியின் முக்கிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தல் சமயத்தில் அரசியலமைப்புத் திருத்தம் சம்பந்தமாக தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள கட்சிகள் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளன என்பதால், பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அரசியலமைப்புச் சட்ட திருத்தப் பணிகளுக்கு சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.