உலகின் மிகப் பெரிய விமானம் சோதனை ஓட்டம் வெற்றி..

உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டார் 10 என்ற விமானம் உருவாக்கப்பட்டது. இது விமானம், ஹெலிகாப்டர் மற்றும் விண்கலம் ஆகியற்றின் தொழில் நுட்பத்தை கலந்து தயாரிக்கப்பட்டது.

இது பயணிகள் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்காக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இங்கிலாந்தில் கார்டிங்டன் விமானப்படை தளத்தில் இருந்து பறக்கவிடப்பட்டது. அப்போது இந்த விமானம் 6100 மீட்டர் அதாவது 20 ஆயிரம் அடி உயரத்தில் 5 நாட்கள் தொடர்ந்து பறந்தது.

இதற்கு ஹீலியம் எரி பொருளாக பயன் படுத்தப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் பறந்து சாதனை படைத்த இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பயணிகள் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.