Home அரசியல் மான்செஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதல்தாரியின் பெயரினை வெளியிட்ட பிரித்தானிய உளவுப்பிரிவினர்

மான்செஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதல்தாரியின் பெயரினை வெளியிட்ட பிரித்தானிய உளவுப்பிரிவினர்

மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரின் பெயரை பிரித்தானிய உளவுப்பிரிவினர்  வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த தற்கொலைபடை குண்டுவெடிப்பில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு தாம் பொறுப்பேற்பதாக, ஐஎஸ் தீவிரவாத அமைப்பு டெலிகிராம் மூலமான செய்தி ஒன்றை அனுப்பி இருந்தது. ஆனால் குறித்த செய்தி குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடாமல் இருந்த பிரித்தானிய பாதுகாப்பு பிரிவானது, லிபியாவிலிருந்து சிறு வயது அகதியாக வந்து மன்செஸ்டர் நகரில் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்த சல்மான் அபேதி என்பவரை தாக்குதல்தாரியின் பெயராக அறிவித்துள்ளது.

மேலும் குறித்த தற்கொலை தாக்குதலானது, அமெரிக்க பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சியானது, பிரிட்டனின் மான்செஸ்டர் ஏரினா நகரில் இடம்பெற்ற நிலையில், இசை அரங்கிற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

 

இந்நிலையில் குண்டு தாக்குதல் காரணமாக சுமார் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சுமார் 58 பேர் வரையிலானவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மன்செஸ்டர் நகர் முழுவது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

அத்தோடு பிரித்தானிய உளவு பிரிவினர் அறிவித்துள்ள சல்மான் அபூதியின் பெயரை, அமெரிக்க புலனய்வு பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.