முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே ஏற்படும் ஒற்றுமையினால் மாத்திரமே அதிகாரங்கள் கிடைக்கப் பெறும்

முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் அமைச்சுப் பதவிகள் இருந்தும் அதிகாரம் மாத்திரம் இல்லாதிருப்பதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கவலை வெளியிட்டுள்ளார்.

நேற்றையதினம் கஹட்டோவிட்டாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அனுசரணையில் இடம்பெற்ற சியனே மீடியா வட்டத்தின் ஊடகச் செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முஸ்லிம் சமூகத்திலிருந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தோம். ஆனால் அதே பிரச்சினைகள் இன்றும் தொடர்கின்றன.

இன்று 21 முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தும், பிரச்சினையொன்றை முன்வைத்து தீர்வைப் பெற்றுக் கொள்ள பலமற்றவர்களாக உள்ளோம். எனினும் முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே ஏற்படும் ஒற்றுமையினால் மாத்திரமே அதிகாரங்கள் கிடைக்கப் பெறும்” என அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்துள்ளார்.