நாட்டில் தற்போது தேவைப்படுவது அமைச்சரவை மாற்றம் அல்ல அரசாங்க மாற்றமே : கூட்டு எதிர்க்கட்சி

நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசியல் நிலைமையில், தேவைப்படுவது அமைச்சரவை மாற்றம் அல்ல அரசாங்க மாற்றம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி இன்று காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய நாள் வெற்றிகரமாக கொண்டாட வேண்டிய நாள். கடந்த காலத்தில் மனிதாபிமான நடவடிக்கை மூலம் வடக்கு மக்களுக்கு பிரதிபலன் கிடைத்தது. எனினும் தற்போதைய அரசாங்கம் அனைத்தையும் இரத்துச் செய்துள்ளது.

மகிந்த ராஜபக்ச கடந்த காலத்தில் படையினருடன் இணைந்து மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், தற்போதைய அரசாங்கம் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

மேலும், அரசாங்கத்தின் டொப் 10 மோசடியாளர்களை அம்பலப்படுத்தியதன் காரணமாக அரசாங்கம் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய முயற்சித்து வருகிறது எனவும் இந்திக அனுருத்த குறிப்பிட்டுள்ளார்.