சமூகத்துக்கான போராட்டங்களில் மர்ஹூம் அஸ்ரப் ஹஸனலியை அவரது இதயமாக, நாடித்துடிப்பாகவே பார்த்தார்

 

“ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற கொள்கையை பிரயோகித்து வெற்றியில் ஊறிப்   போன ஹக்கீம் ஒவ்வொரு ஊரிலிருக்கும் முஸ்லீம்  காங்கிரஸ் போராளிகளையும், ஆதரவாளர்களையும் ஒன்றிணைந்து  செயற்பட முடியாதபடி  பல பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுகளுக்கும் பல ரகசிய வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் கொடுத்து   இவர்களிடையே பனிப்போரினை ஏற்படுத்தியதுடன்    ” பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி”  ஒரு பிரிவையாவது தன்னுடன் இறுதிவரையில்  தக்கவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் செயற்படும்  ஆங்கில தேசத்து வெள்ளைக்காரர்களின் மறுவடிவம் தான் இந்த ஹக்கீம். இந்த ஊர் பிரிவுகளுக்கிடையேயான முரண்பாடுகளும். சண்டைகளும் முடியப்போவதுமில்லை, ஹக்கீமின் தில்லு முல்லுகளையும், திருவிளையாடல்களையும் இவர்கள் உணரப்  போவதுமில்லை  என்ற நிலைப்பாடு ஹஸனலி, பஷீர் சேகுதாவூத், அன்ஸில், தாஹிர், தாஜூடீன் போன்ற இன்னும் பலரை   கட்சியை விட்டு வெளியே தூக்கியெறிந்ததைத் தொடர்ந்து போராளிகளும், ஆதரவர்களும், மக்களும் இன்று முஸ்லீம் காங்கிரசில்  நடப்பவை என்ன? என்பதை யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதன் முடிவு நிச்சயமாக ஹக்கீமுக்கு சாதகமாக  அமையப்போவதில்லை.

ஹஸனலியினால் ஒவ்வொரு பிரதேசத்திலும் முஸ்லீம்  காங்கிரசை ஹக்கீமிடமிருந்து மீட்டெடுத்து  பாதுகாப்போம்  என்ற உரிமை கலந்த விடுதலைக் குரலாய் மரத்துக்கு உரம் சேர்க்கும் தொனியில்  மேடைகளை அதிர வைக்கும் வகையில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலை ஹக்கீமிடம் கேட்டால்  பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லையென்பார். ஆனால் இறுதி கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் ஹக்கீமுக்கு வரக்கூடிய எதிர்ப்புகளுக்கு, எதிர்பிரச்சாரங்களுக்கு இங்கிருக்கும் அனைவரும் பதில் குரல் கொடுக்க வேண்டும் என்ற முஸ்லீம் காங்கிரசின் அடுத்த தலைவர் ஹஸீரின் கட்டளைக்கு அமைய,    ஹக்கீம் அணியினால் போடப்படும் கூட்டங்களில், மேடையில் ஹக்கீம் வாய் திறக்காது மௌனியாக இருக்க,   ஹக்கீமின்  ரோபோக்களான  முபீன், ஜவாத், முழக்கம் மஜீத், அலிசாஹிர் மௌலானா, தவம், பளீல் , நசீர் அஹமட், மன்சூர், பைசல் காசிம், ஆரிப் சம்சுதீன் போன்ற     உயர்பீட அடிமைகள்  ஹக்கீம்  சொல்லிக் கொடுத்தபடியே  கிளிப்பிள்ளையாக  பேசுகின்றார்கள்,  நாக்கு மட்டும் தான் இவர்களுடையது மூளை ஹக்கீமுடையது.    கிழக்கு மாகாணத்தானின் விரல்களைக் கொண்டே கிழக்கு மாகாணத்தானின் கண்கள் ஹக்கீமின் விசமப் புத்தியால் குத்தப்படுகிறது. பணத்துக்கும் பதவிகளுக்கும் இரையான உயர்பீட அடிமைகளும், வால்களும் ஹக்கீம் அநியாயக்காரன் என்று தெரிந்தும் எதுவுமே தெரியாதவர்கள் போல் பசப்புகிறார்கள். மக்களை முட்டாளாக்க முனைகின்றார்கள், ஆனால் இவர்கள் மக்களால் முட்டாளாக்கப்படும் காலம் வெகு  தொலைவிலில்லை. 

மர்ஹூம் அஷ்ரபின் காலத்தில் மக்கள் சேவைகளுக்காக, அவர்களின் பிரச்சனைகளுக்காக, சமூக தேவைப்பூர்த்திக்காக உறுமும்  இரும்புச் சிங்கங்களால் முஸ்லீம்  காங்கிரஸ் உயர் பீடமும், அதன் அதிகாரங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  ஆனால் இன்று சுயநலப்பூர்த்திக்காக ஹக்கீம், மன்சூர் ஏ காதர், முழக்கம் மஜீத், ராவுத்தர் போன்ற சாயம் பூசிய நரிகளின் ஊளையிடும் சத்தம் பட்டாசாக சமூகத்தை விலை பேசுகிறது. மன்சூர் ஏ காதர், முழக்கம் மஜீத் போன்றோர் ஓட்டை கழட்டி விட்டு மாற்றிய கிடுகு என்று சொல்வதை  விட பன்னாடை என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து போராடிய காலங்களில் புலிகளால் துரத்தியடிக்கப்பட்டு, சுடப்பட்டு, தப்பிப்பிழைத்து படை முகாம்களில் தங்கியிருந்து இராணுவத்தினரால் ஹெலிக்கொப்டர்களில் அகதிகளாக கொழும்புக்கு கொண்டுவரப்பட்டவர்கள் தான் இந்த மர்ஹூம் அஸ்ரப், ஹஸனலி போன்றவர்கள். இவர்கள் அன்று சிந்திய வியர்வையில், ரத்தத்தில் ஒரு துளியின் பெறுமதியாவது ஹக்கீமுக்கு புரியுமா ? இலவச இணைப்பாக தேசியப்பட்டியலில் வந்தது முதல் தலைவரானதிலிருந்து  17 வருடமாக  இன்று வரை  ஒன்றுமே செய்யாத  ஹக்கீம் ஒரு அடி துள்ளினால், உயிரைக் கொடுத்து இக்காட்சியை  உருவாக்கிய, கிழக்கு  மண்ணின் சொந்தக்காரர்களான  ஹஸனலி, பஷீர் சேகு தாவூத், அன்ஸில், தாஹிர், தாஜூடீன் போன்றோர்கள்  எவ்வளவு துள்ளுவார்கள். இவர்களின் சமூகம் நோக்கிய போராட்டத்துக்கு,  தியாகத்துக்கு முன்னால் தினமும் பொய்யால் கப்பலோட்டும்    ஹக்கீமால் நின்று பிடிக்க முடியுமா?  

ஹஸனலியால் முடிந்தால் இப்பிரதேசத்தில் ஒரு கூட்டத்தை நடத்திக் காட்டட்டும்  என சவாலுடன் முழக்கமிட்ட புதிய தவிசாளர்  மஜீதின் முதலாவது சவாலே தோற்றுப் போகுமளவிற்கு  ஹஸனலி சாய்ந்தமருதில் மக்கள் வெள்ளத்தில் நடத்திக் காட்டிய கூட்டத்தை  மறுக்கமுடியுமா? இன்று  புதிய தவிசாளராக இருக்கும் முழக்கம் மஜீது, அன்று காசுக்காக பலரிடம் தாவும் போது “கோளையும் சொல்லி, அற்ககோளுடன் கேர்ளையும் கொடுத்தால்” ஹக்கீமிடம் வேண்டிய காரியத்தை முடிக்கலாம் என முழங்கியதை இன்று ஞாபகமூட்டுவாரா?   கவனிப்பாரற்று கிடைக்கும் கிழக்கு வாழ் மக்கள் எத்தனையோ தேவைகளுடன் , பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில்  வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவைகளை கவனியாமல் ஹக்கீம் நிந்தவூர் கூட்டத்தில் வளைத்து மாடுகள் உரச நடுவில் கம்பு நாட்டிய கதைகளை சாதனையாக கூறுகின்றார். கிழக்கின் மண்வாசனையை உணராது பெண் வாசனையை மோப்பமிடும் ஆவணத்தலைவர் சம்மாந்துறையில் நாட்டுக்கு கோழி தின்றால் என்ன? அல்லது வீட்டில் வளர்க்கும் கோழி தின்றால்  என்ன? ஹஸனலியை ஏன் அதிகாரமுள்ள பொதுச் செயலாளர்  பதவியில் இருந்து தூக்கி வீசினார் என்பதற்கு சரியான ஒரு காரணத்தை ஹக்கீமால் சொல்ல முடிந்ததா? அல்லது   ” நான்  பொதுச் செயலாளராக தொடர்ந்து இருந்தால் வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது கரையோர மாவட்டம் போன்ற தீர்வுகளில் ஹக்கீமால்  சுயநல ராஜதந்திர முடிச்சுக்களை போடுவதற்கும், பிரிப்பதற்கும் தடையாக இருப்பேன் என்று தான் என்னை ஆரம்பத்திலேயே வெளியேற்றினார்’ எனும் ஹஸனலியின் கூற்றுக்கு ஹக்கீமின்   பதிலாவது கிடைத்ததா?

சமுகப்பற்றுடன்  நோக்கிய மர்ஹூம் அஷ்ரபிற்குத்தான் ஹஸனலியின் பெறுமதி விளங்கும், வியாபாரப்பற்றுடன் நோக்கும் ஹக்கீமுக்கு ஹஸனலியின் பெறுமதி ஒரு போதும்  விளங்காது, மர்ஹூம் அஷ்ரபிற்கு ஹஸனலி எப்படியோ அப்படித்தான் பிரபாகரனுக்கு அன்டன் பாலசிங்கம் இருந்தார். மர்ஹூம் அஸ்ரப் ஹஸனலியை அவரது இதயமாக, நாடித்துடிப்பாகவே பார்த்தார். ஆனால் ஹக்கீம்     ஹஸனலியின் பதவியைப் பறித்ததுடன், ஹஸனலி  கேட்காத  தேசியப்பட்டியலைக் காட்டி எவ்வளவோ பொய்களைக் கூறி,  கேவலப்படுத்தி,   அவமானப்படுத்தி, வீண் பழிகளை சுமத்தி   வேதனைப்படுத்திய ஹக்கீமை இனி யார் நம்பி  ஏற்றுக் கொள்வார்கள்? இவ்வளவு தியாகங்களையும் செய்த ஹஸனலியால் ஹக்கீமின் இந்த துரோகச்செயல்களை தாங்கிக் கொள்ளத்தான்  முடியுமா? ஹஸனலி இனி அடங்கி இருப்பாரா? அல்லது ஹஸனலியை யாராலும் அடக்கத்தான் முடியுமா?  மர்ஹூம் அஷ்ரபின் கனவான கரையோர மாவட்டத்தினை அல்லது அதற்கு சமமான தீர்வினை பெறுவதிலேயே   ஹஸனலியின் ஒவ்வொரு மூச்சும் செலவழியும்,  அதற்காக ஹக்கீம் அல்லது ஹக்கீம் அணி அல்லது அதற்கு தடையாக இருக்கும்  எதைவேண்டுமானாலும் தியாகம் செய்து கரையோர மாவட்டத்தைப் பெறுவதிலேயே அன்று போல் என்றும் ஹஸனலி  குறியாக இருந்து செயற்படுவார். 

-அமீர் மௌலானா-