வியட்நாம் ஹனேயில் கூட்டுறவு துறையாளர்களின் உற்பத்திகளை கொண்ட வர்த்தக சந்தையின் நிகழ்வு

 

வியட்நாம் ஹனேயிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா..

வியட்நாமின் தலைநகரான ஹனேயில் இடம் பெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் கூட்டுறவு அமைச்சர்களின் மாநாட்டுக்கு சமாந்தரமாக முதன் முறையாக கூட்டுறவு துறையாளர்களின் உற்பத்திகளை கொண்ட வர்த்தக சந்தையின் நிகழ்வும் நேற்று  மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு நடைபெறும் 21 ஆம் திகதி வரை இந்த வர்த்தக சந்தை இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த வர்த்தக கண்காட்சி வளவில் சுமார் 300 விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுன்,பல்வேறு உற்பத்தி பொருட்களை இ்ங்கு காணக்கூடியதாக இருந்தது.குறிப்பாக மரக்கறி,பழ வகை உள்ளிட்ட தானியப் பொருட்களினால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பொது்மக்களினால் அதிகம் விரும்பி வாங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது,

இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள ஏற்பாட்டுக் குழுவினரால் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்,கிழக்கு மாகாண கூட்டுறவு ,விவசாயத்துறை அமைச்சர் துறை ராஷசிங்கம் மற்றும் கூட்டுறவு ஆணையாளர் எஸ்.எல்.நசீர் உட்பட இலங்கை பிரதி நிதிகள் குழுவினருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இக்குழுவினர் கலந்து  கொண்டதுடன்,விற்பனையாளர்களிடத்திலும் கலந்துரையானர்.​