ஜீ.எஸ்.பிளஸ் வரிச் சலுகை மீண்டும் இலங்­கைக்கு மே மாதம் கிடைக்கும்: அர­சாங்கம் நம்­பிக்கை

மனித உரி­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களில் கடந்த அர­சாங்­கத்தின் பொறுப்­பற்ற செயற்­பாட்டின் கார­ண­மாக இழக்­கப்­பட்ட ஜீ.எஸ்.பிளஸ்  வரிச் சலுகை   மீண்டும் இலங்­கைக்கு  மே மாதம்     கிடைக்கும் என்று  அர­சாங்கம் நம்­பிக்கை வெளி­யிட்­டுள்­ளது. 

 ஜீ.எஸ்.பி. வரிச் சலு­கையை  மீண்டும் இலங்­கைக்கு வழங்­கு­வது தொடர்பில் மதிப்­பீடு செய்­வ­தற்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உயர் மட்ட தொழில்­நுட்ப மதிப்­பீட்டுக்குழு இலங்கை வந்­துள்­ளது. 

இந்த குழு­வி­னரால் இலங்கை தொடர்பில் தயா­ரிக்­கப்­படும் தொழில்­நுட்ப அறிக்கை எதிர்­வரும் புதன்கிழமை பெல்­ஜியம் – பிரசெல்ஸ் நகரில் இடம்­பெற உள்ள ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் விஷேட கூட்டத்தொடரில் சமர்ப்­பிக்­கப்­பட உள்­ளது. 

இலங்­கையின் தற்­போ­தைய பொரு­ளா­தார ஸ்திரத்­தன்மை, மனித உரி­மைகள் மற்றும் தொழி­லா­ளர்­களின் உரிமை உள்­ளிட்ட விவ­கா­ரங்கள் தொடர்பில் அர­சாங்கம் வழங்­கி­யுள்ள முன்­னேற்ற அறிக்­கையை மதிப்­பீடு செய்­வது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உயர்மட்ட தொழில்­நுட்ப மதிப்­பீட்டுக் குழுவின் பணி­யாக உள்­ளது. 

எவ்­வா­றா­யினும் எதிர்­வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை இடம்­பெற உள்ள ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் விஷேட கூட்டத் தொடரில் மதிப்­பீட்டு குழுவின் அறிக்கை சாத­க­மான தன்­மை­களை வெளிப்­ப­டுத்­தினால் மே மாதத்தில் இருந்து ஜீ.எஸ்.பி 

வரிச்சலு­கை  மீண்டும் இலங்­கைக்கு  கிடைக்கும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் விஷேட கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை குழு திங்கட்கிழமை பெல்ஜியம் செல்ல வுள்ளமை குறிப்பிடத்தக்கது.