விமான நிலையம் மூடப்பட்டதனால் 7.6 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது : அநுரகுமார

கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்ட காரணத்தினால் 7.6 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாத காலங்களாக ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்காக விமானநிலையம் பகுதியளவில் மூடப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட சேவையினை வழங்கி வந்தது.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களில் மாத்திரம் 7.6 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதியளவிலான வசதிகள் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

குறிப்பாக, சில விமானங்களை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்க முடியாத நிலமையும் புனரமைப்பின் பின்பும் இலாபம் ஈட்ட முடியாத நிலமையுமே தற்போது காணப்படுகின்றது.

மேலும், பெற்றுக்கொண்ட கறுப்பு பணத்தை வைத்து ​இலாபம் தரக்கூடிய வியாபாரத்தில் முதலிடுவது போன்றே, இந்த கட்டுநாயக்க விமான நிலையமும் புனரமைக்கப்பட்டுள்ளது என அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.