வடக்கு மாகாண சபையை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு பணம் தேவை. ஆனால் தற்போதைய அரசாங்கத்திடம் பணம் இல்லாத காரணத்தினால் அது எவ்வாறு வெற்றியளிக்கும் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண சபை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்த காலத்தின் போது, வடமாகாண சபையினையும் தேசிய சபையினையும் நான் தான் நடத்தி வந்தேன். ஆனால் இன்று புதிய அசாங்கம் வந்ததும் அவை அனைத்தும் நடந்தியபாடில்லை.
குறிப்பாக ஆட்சிக்கு வந்ததும் முதலாவதாக வடக்கு மாகாண மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்து விட்டனர்.
இந்தநிலை உருவாக்கப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துமாறு எந்த தலைவர்களாவது குரல் எழுப்புகின்றார்களா? இல்லை.
அவ்வாறு என்னால் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண சபை தற்போது எந்தளவிற்கு வெற்றியளித்துள்ளது என்பது என்றால் கூற முடியாது. ஆனால் வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு பணம் தேவை.
அரசுதான் வடமாகாண சபைக்கு பணம் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது அரசிற்கே பணம் இல்லை என்றால் எப்படி வெற்றிகரமாக நடக்கும்? எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.