அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைத்தால்…

அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைத்தால், 1953 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹர்த்தாலை விட மிகப் பெரிய மக்கள் போராட்டத்தை நடத்த எண்ணியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற பிவித்துரு ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 

பாரிய போராட்டத்தை நடத்துவதற்காக நாட்டை தயார்படுத்தி வருவதாகவும் அதனை நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்தே ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இரண்டாம் கட்ட நடவடிக்கை கடந்த சனிக்கிழமை ஹபராதுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது. 

காணப்படும் கடும் கோரிக்கைக்கு அமைய அடுத்த கட்ட எதிர்ப்பு கூட்டத்தை கிழக்கு மாகாணத்தில் நடத்த எண்ணியுள்ளோம். 

அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கூட்டத்தை நடத்தும் இடம் சம்பந்தமாக சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.