யுத்த குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை

யுத்த குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் சர்வதேச தரப்பிடம் வாக்குறுதிகளை கொடுத்தாலும் ஜனாதிபதியின் நிலைப்பாடு உள்ளக விசாரணை பொறிமுறை என்பதே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  தெரிவித்தது. ஆட்சி மாற்றம் ஏற்படாது இருந்திருப்பின் இராணுவமும் ராஜபக் ஷக்களும் போர்க்குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குறிப்பிட்டது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே கட்சியின் உறுப்பினர்கள் இதனை தெரிவித்தனர்.