றிங்டோன் மை வெளிச்சம்


Mohamed Nizous

போட்டிருக்கும் றிங் டோன்
காட்டி விடும் சிலர் குணத்தை
பாட்டென்றும் பயானென்றும்
போட்டி போட்டு போடுகிறார்

குத்துப் பாட்டு றிங் டோன்
பித்துப் பிடித்த ஆள் காட்டும்
சத்தம் மிகுந்த றிங் டோன்
சுத்த டென்ஷன் ஆள் காட்டும்

இறைமறை வசன றிங்டோன்
அரை குறை அறிவைக் காட்டும்
பறையடிக்கும் ஒலி றிங்டோன்
பாமரத் தனத்தைக் காட்டும்

பழைய பாட்டு மெட்டு றிங்டோன்
பாவிப்பவர் வயதைக் காட்டும்
இளையவர் என்று காட்டும்
எந் நேரமும் மாறும் றிங் டோன்

உபதேசம் பண்ணும் றிங் டோன்
ஒட்டி இருக்கும் இயக்கம் காட்டும்
சிலர் தேச பக்தி காட்ட
சிறி லங்கா மாதா போட்டிருப்பார்

பிள்ளையின் குரலில் றிங்டோன்
உள்ளத்தின் பாசம் காட்டும்
இல்லாளின் குரலில் றிங் டோன்
இவன் கில்லாடி எனக் காட்டும்.

பெயர் சொல்லி அழைக்கும் றிங் டோன்
பிஸி இவர் எனக் காட்டும்
துயர் பாட்டு பாடும் றிங் டோன்
தொங்கலில் சொந்தக் கதை காட்டும்

கம்பனியால் போட்ட றிங் டோனே
கனக்கப் பேரின் மொபைலில் இருக்கு
இம்மாதிரி ஆட்கள் பற்றி
எதுவும் சொல்ல முடியாது.