லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகம் மீதான தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
தாக்குதலாளி மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
மேலும் கார் ஒன்று பலவந்தமாக அங்கே மோதச் செய்யப்பட்டதாகவும் அதில் நான்கு பாதசாரிகள் காயமடைந்ததகாவும் செய்திகள் வருகின்றன.
நாடாளுமன்ற வளாக சுற்றுச்சுவரில் கார் மோதியதைக் காட்டும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவருகின்றன.
அவசர சிகிச்சை வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் அங்கு குழுமியுள்ளன.
துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டவுடன் நாடாளுமன்றத்துக்குள்ளிருந்த பிரிட்டன் பிரதமர் தெரெசா மே அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நாடாளுமன்ற அவையின் நடவடிக்கையும் அவசரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.