அல்-ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தின் 2017 புதிய மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரல்.

பழுலுல்லாஹ் பர்ஹான்

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் கல்விப் பயணத்தில் மற்றுமோர் சேவையாக பட்டதாரி மௌலவியாக்களை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஏறாவூர் அல்ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தில் 2017 புதிய மாணவிகள் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கலாபீடத்தின் அதிபர் எஸ்.எம்.எம்.ஹில்மி (பலாஹி) தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில் …………..
விண்ணப்பதாரிகள் அனைவரும் 01-04-2017 இல் 18 வயதுக்கு மேற்படாதவராக இருப்பதோடு ,கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி இருப்பதுடன் ,அல்குர்ஆனை திறமையாக ஓதத் தெரிந்திருத்தல் வேண்டுமெனவும் விண்ணப்பங்களை அல்- ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடத்தில் அல்லது சுய விலாசமிடப்பட்ட 9-4 அளவிலான காகித உறைகளை அல்-ஹைராத் மகளிர் இஸ்லாமிய கலாபீடம் புன்னக்குடா வீதி,ஏறாவூர் எனும் முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்வதோடு விண்ணப்பப் படிவங்களை 26-03-2017 திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் மேலதிக விபரங்களுக்கு 0772364241 அல்லது 0777262485 போன்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவிகளுக்கு எதிர்கால நவீன சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் ஷரீஆ பாடநெறியும் , கல்விப் பொதுத் தராதர உயர்தர கற்கையும் இணைந்த நன்கு வடிவமைக்கப்பட்ட 4 வருட கற்கை நெறியை கொண்ட இக் கலாபீடத்தில் தேர்ச்சியும்,அனுபவமும் கொண்ட உலமாக்களை கொண்டு முழுநேர ஷரீஆ கற்கை நெறி,விஷேட ஆசிரியர்களை கொண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பாடங்கள்,நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு தகவல் தொழில்நுட்ப பாடநெறி,இரண்டாம் மொழி கற்கை நெறிகள்,(ஆங்கிலம்,சிங்களம், உணவு மற்றும் பாதுகாப்புடன் கூடிய தங்குமிட வசதிகள்,ரம்மியமான சூழலுடன் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட வகுப்பறை வசதிகள்,நவீன வசதிகள் மற்றும் கற்றலுக்கு உகந்த சூழலுடன் கூடிய நூலக வசதிகள் போன்ற சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.