ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் உள்ளது. அதன் அருகே ராணுவ ஆஸ்பத்திரியும் இயங்கி வருகிறது. அங்கு பலத்த ராணுவ பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராணுவ ஆஸ்பத்திரியில் இன்று காலை திடீரென குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். பதிலுக்கு ராணுவ வீரர்களும் சுட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் உயிர் சேதம், காயம் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்தும் துப்பாக்கி சண்டை நடை பெற்று வருகிறது.