பிள்ளையின் பெயரில்
பேஷ் புக்கில் திரிபவள்
வாப்பாவின் பெயரில்
வட்ஸப்பில் இருப்பவள்
மனைவி எனும் பெயரில்
மன்னராட்சி செய்பவள்
மாணவி எனும் பெயரில்
மார்க்ஸ் கூட எடுப்பவள்
சிறுமி எனும் பெயரில்
செல்லமாய்க் கெஞ்சுபவள்
உம்மா எனும் பெயரில்
உயிர் தேய்ந்து வளர்ப்பவள்
மகள் எனும் பெயரில்
மனதை வருடுபவள்
அக்கா எனும் பெயரில்
அக்கறையாய்ப் பார்ப்பவள்
தங்கை எனும் பெயரில்
தங்கி வாழ்பவள்
பாட்டி எனும் பெயரில்
பழங்கதை சொல்பவள்
பெண் என்ற பெயரில்
பிறருக்காய் வாழ்பவள்….!