அமெரிக்க பாதுகாப்பு மையமான பென்டகன், ஐஎஸ் தீவிரவாதிகளை மொத்தமாக அழிப்பதற்கான புதிய திட்ட வரைபை, அந்நாட்டு ஜனாதிபதி வசஸ்தலமான வெள்ளைமாளிகைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்கு, பென்டகன் புதிய பொறிமுறைகளை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில், பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், அந்நாடுகளின் அரசிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல கொடூரமான தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க, புதுமையான திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்ட்டுள்ளதோடு, அமெரிக்க பாதுகாப்புக்காக 54 பில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதற்கமைய பென்டகன், புது வித தாக்குதல் பொறிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளதோடு, நவீன ஆயுத பயன்பாடுகளுடனான பாரிய இராணுவத் தாக்குதல் ஒன்றை நடத்தும் சாத்தியப்பாடுகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.