ஐ.தே.கட்சியானது தேசிய வளங்களை விற்கும் கொள்கையை ஆரம்ப காலங்களிலிருந்து செய்து வருவதாக மஹிந்த குற்றச்சாட்டு

கடன் சுமையில் இருந்து விடுபடுவதற்காக எனக் கூறிக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி தேசிய வளங்களை விற்கும் கொள்கையை ஆரம்ப காலங்களில் இருந்து செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்று ஏற்பாடு செய்துள்ள தேசிய வளங்களை பாதுகாக்கும் மத்திய நிலையத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

இதேவேளை, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் மேற்கொண்டு வரும் இந்த பாவ காரியத்தில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றிருப்பது கவலைக்குரிய விடயம் என மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.