5 ஏக்கருக்கு அதிகமான புல் வனக்காடு ஏரிந்த வண்ணம் காணப்படுகின்றது..

க.கிஷாந்தன்

கொட்டகலையில் இயங்கி வரும் ரொசிட்டா கால்நடை வளர்ப்பு புல் வனப்பகுதியில் திடீரென தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கால்நடை வளர்ப்பு பண்ணைக்குரிய புல் வனப்பகுதி 5 ஏக்கருக்கு அதிகமான புல் வனக்காடு ஏரிந்த வண்ணம் காணப்படுகின்றது.  

இந்த வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்த ரொசிட்டா கால்நடை பண்ணை ஊழியர்களும் திம்புள்ள – பத்தனை பொலிஸாரும் தீயணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதேவேளை வரட்சியான காலப்பகுதி நிலவி வரும் நிலையில் ரொசிட்டா கால்நடை பண்ணையில் பராமரிக்கப்பட்டு வருகின்ற மாடுகளுக்கு புல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் அம்மாடுகளுக்கு புல் வெட்டும் வனப்பகுதியே இவ்வாறு தீ பிடித்துள்ளது.

இதனால் கால்நடை வளர்ப்புகளுக்கு புல்லுதீணி வழங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக பண்ணையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.