சுமார் 11 வரு­டங்­களின் பின்னர் புகை­யி­ரத போக்­கு­வ­ரத்­திற்­கான நேர அட்­ட­வ­ணையில் மாற்றம்..

சுமார் 11 வரு­டங்­களின் பின்னர் புகை­யி­ரத போக்­கு­வ­ரத்­திற்­கான நேர அட்­ட­வ­ணையில் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த நேர அட்­ட­வணையை அடுத்த மாதம் முதல் மக்­க­ளுக்கு அறிமுகப்படுத்தும் பணி­களை முன்­னெ­டுக்­கவுள்ளதாக போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

நேற்று குறித்த நேர அட்­ட­வணை போக்­கு­வ­ரத்து பொது முகா­மை­யாளர் பீ.பி. ஆரி­ய­ரத்­ன­வினால் அமைச்­ச­ருக்கு வழங்­கப்­பட்­டது.

இந்­நி­கழ்வு நேற்று போக்­கு­வ­ரத்து அமைச்சில் நடை­பெற்­றது. இதன்­பி­ர­காரம் குறித்த நேர அட்­ட­வணை அடுத்த மாதம் முதல் மக்­க­ளுக்கு அறி­வு­றுத்தும் நோக்­குடன் விநி­யோகம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. 

அத்­துடன் ரயில்வே சார­திகள் , பணி­யா­ளர்கள், அதி­கா­ரி­க­ளுக்கு புதிய நேர அட்­ட­வணை வழங்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இந்த பணி­களை உடன் முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.