மறு நாள் ஹக்கீமுக்கு பாராளுமன்றத்தில் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது…!!

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 4)

(இந்தக் கட்டுரையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் எந்த அரசியல் வாதியும் இதில் சொல்லப்பட்டிருப்பவை பொய் என்றால் எனக்கெதிராக மான நஷ்ட வழக்குத் தொடரலாம்)
(ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது “இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது கடமையை நிறைவேற்றவில்லை எனும் சந்தர்ப்பங்களில் ஒருவர் அவரின் குறைகளை அவரின் மீது அதிகாரம் கொண்டவர்களிடம் குறிப்பிட்டு அவரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கவோ முயல வேண்டும்.அல்லது அவருக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அவரின் குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவரோடு நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிந்து கொள்வதோடு அவரால் ஏமாற்றப் படாமல் தவிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவரை நேர்வழிப்படுத்த அல்லது பதவியில் இருந்து விலக்க முயலலாம்”-(அல் அத்கார், ஹிப்ழுல் லிஸான்,இமாம் நவவி)
*****

ஹக்கீமவர்களின் வீட்டடியில் நின்று கொண்டு குமாரியிடம் இருந்து விடயத்தைக் கேட்டறிந்து கொண்ட ரிஷாட் அங்கிருந்த ஏனைய மூவரையும் குமாரிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.தன்னால் குமாரிக்கு உதவ முடியும் என்று உறுதியளித்த ரிஷாட் தாங்கள் நின்று கொண்டிருக்கும் இடம் பொருத்தமில்லை என்று கூறி குமாரியையும் கூட்டிக்கொண்டு நால்வரும் தாஜ் ஹோட்டலை நோக்கி விரைந்தனர்.

தாஜ் ஹோட்டலில் வைத்து தங்களுடைய திட்டத்திற்கு இணங்குமிடத்து குமாரிக்கு உதவி செய்வதாக ரிஷாட் உறுதியளித்தார்.நிலைமையின் பாரதூரத்தைப் புரிந்து கொண்ட அமீர் அலியும்,பைசல் காஸிமும் திட்டத்தில் இருந்து விலகிக் கொண்டனர்.

இங்கே ஒரு தெளிவு அவசியப்படுகிறது.
குமாரி கூரேயின் சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் வெகுவாகப் பேசப்பட்ட விடயம் ரிஷாட் பதியுதீன்,நஜீம் ஏ மஜீத் என்பவர்கள் ஹக்கீமைப் பதவி விலக்குவதற்கும், சந்திரிக்காவின் அரசாங்கத்தில் இணைய மிரட்டுவதற்கும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்திதான் குமாரி கூரேயின் முழு அத்தியாயமும் என்று கூறப்பட்டது.அவ்வாறுதான் போராளிகள் மத்தியில் அது இன்றும் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் ரிஷாட் குமாரி கூரேயின் உண்மையான விவகாரத்தைத்தான் தன் அரசியல் அபிலாஷைகளுக்கு அசிங்கமாகப் பயன்படுத்த முனைந்தாரே ஒழிய அவரும்,சந்திரிக்காவின் அரசாங்க உறுப்பினர்களும் இட்டுக்கட்டிச்செய்த விடயம் அல்ல இது என்பது எனது தேடலில் நிரூபணமானது.

ஏற்கனவே அரசாங்கத்தில் இணையும் நோக்கத்திற்கு ஹக்கீம் தடையாக இருந்தார் என்பது எமக்குத் தெரிந்ததே.குமாரியின் விவகாரத்தைப் பயன்படுத்தி அதனை ஒரு பூதாகரமாக மக்கள் மத்தியிலும்,மீடியாக்களிலும் வெடிக்க வைத்து விட்டு ஹக்கீம் தலைமைத்துவத்திற்கு தகுதியில்லை என்று காட்டி அவரை விலக்குவது ரிஷாடின் நோக்கமாக இருந்தது என்பது அவரின் செயற்பாடுகளில் இருந்து வெளிப்படுகிறது.அத்தோடு குமாரி விவகாரத்தை ஜனாதிபதியிடம் கொண்டு செல்வதன் மூலம் அவரின் நம்பகத்தன்மையைப் பெறுவதோடு மாத்திரமல்லாமல் ஏற்கனவே ஹக்கீமின் மீது கோபத்தில் இருக்கின்ற ஜனாதிபதி, ஹக்கீமை அழிப்பதற்கு குமாரி விவகாரத்தைப் பயன்படுத்தலாமென்றும் அவர் நம்பியிருந்தார்.குமாரி விவகாரத்தைக் காட்டி ஹக்கீமை மிரட்டி பல விடயங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது.

ரிஷாடின் திட்டங்களுக்கு உடன் பட்ட குமாரியை ஜனாதிபதியை சந்திக்க வைப்பதாக வாக்களித்து விட்டு அவரை இனி வெளியே தங்கவைப்பது சரியில்லை என்பதற்காக ஜனாதிபதி மாவத்தையில் உள்ள சிலோன் இண்டர் கொண்டினெண்டல் ஹொடலில் ரிஷாடின் உறவினர் ஒருவரின் பெயரில் அறை ஒன்றைப் பதிவு செய்து குமாரி தங்க வைக்கப்பட்டார். 

மறுநாள் அதாவது ஏப்ரல் 14ம் திகதி குமாரி தங்கியிருந்த அறையைத் தட்டிய ரிஷாடும், நஜீபும் ஜனாதிபதியை குமாரி சந்திப்பதாக இருந்தால் ஹக்கீமிற்கும் தனக்கும் இடையே இருக்கும் தொடர்பினை பற்றி கெமெராவிற்கு முன்னர் தெரிவிக்கவேண்டும் என்று ஒரு நிபந்தனை விதித்தனர்.ஒரு கெமரா மேனையும் கூடவே கொண்டு வந்திருந்தனர்.அதற்கு இணங்கிய குமாரியின் வாக்குமூலத்தை வீடியோ செய்தனர்.அந்த வீடியோதான் பின்னர் 2004 மே மாதம் 17ம்திகதி ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்டது.அதன் விபரத்தைப் பின்னர் பார்ப்போம்.

இதனைப்பாவித்து ஏப்ரல் 22ம்திகதி நடைபெறவிருக்கும் சபாநாயகர் தெரிவில் அரசாங்கத்தின் சபாநாயகர் வேட்பாளாரான டி.ஈ.டபுள்யூ குனசேகரவிற்கு ஹக்கீமை வாக்களிக்க வைக்கவைப்பதாகவும்,பின்னர் இதனைப் பயன்படுத்தி அவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றப்போவதாகவும் குமாரிக்குக் கூறப்பட்டது.
பின்னர் ஏப்ரல் 18ம் திகதி ரிஷாத் பதியுதீன் குமாரியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்று மாலை 4.30மணிக்கு ஜனாதிபதியை சந்திப்பதற்காக பகல் 1.30 மணியளவில் ஆயத்தமாக இருக்குமாறு குமாரிக்கு தெரிவித்தார்.

சுமார் 1.30 மணியளவில் ரிஷாட் பதியுதீனும்,நஜீப் ஏ மஜீதும் குமாரி தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தனர்.குமாரியைக் கூட்டிக்கொண்டு வரும்போது வெளியே அவர்களுக்காக ஒருவர் காத்துக்கொண்டிருந்தார்.அவர்தான் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண.ஜனாதிபதி சந்திக்காவின் நீண்ட நாள் பிரத்தியேக உதவியாளரான அமா ஜயசிங்கவின் கணவர்.ஜனாதிபதி மாளிகையை நோக்கி அவர்களின் வாகனம் நகர்ந்தது. 

ஜனாதிபதி மாளிகையில் 4.30 மணிக்கு ஜனாதிபதி வரவில்லை.அவர் வரும்போது 6.00 மணியாகியிருந்தது.காரணம் ஒரு நாட்டின் தூதுவரோடு நடந்த கூட்டத்தால் தாமதமாகிவிட்டது என்று ஜனாதிபதி கூறினார்.குமாரியைச் சந்திப்பதற்காக ஜாதிக ஹெல உறுமையவின் பிக்குகளோடான தனது கூட்டத்தை ரத்து செய்ததாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஹக்கீம் ஒரு விசுவாசமற்ற மனிதர் என்றும்,அவர் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தில் இணைந்தாலும் தான் அவரை ஒரு மாதகாலத்தின் பின்னர் விரட்டியடிக்கப்போவதாகவும் சந்திரிக்கா குமாரி கூரேயிடம் குறிப்பிட்டார்.ரணிலின் அரசாங்கத்தில் இணைவதற்கு 80 மில்லியன் ரூபாய் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டதாகவும் 2001 தேர்தலில் ஹக்கீம் தனக்குச் செய்த துரோகத்திற்காக ஹக்கீமைத் தான் மன்னிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி குமாரியிடம் சொல்லியிருந்தார்.அது மாத்திரமல்லாமல் மிலிந்த மொறகொடவும்,ரவி கருணாநாயகவும் ஓபராய் ஹோட்டலுக்கு ஹக்கீமை அழைத்துச் சென்று ரணிலின் பக்கம் திரும்புவதற்கு மதுவும்,மாதுவும் கொடுத்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.

குமாரி ஏற்கனவே ரிஷாடினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவில் கூறிய விடயங்களை ஒரு கடிதத்தில் எழுதித் தருமாறு ஜனாதிபதி குமாரியை வேண்டினார்.
அதற்கு இணங்கிய குமாரியிடம் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் இனி குமாரி வீட்டில் தங்குவது பாதுகாப்பில்லை என்றும் கொண்டினெண்டல் ஹோட்டலிலேயே தங்குமாறு கூறியதோடு தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்திருந்தார்.அவர் கொடுத்த இலக்கம் 0777736104.இந்த இலக்கம் ஜனாதிபதி செயலகத்தின் பெயரின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது.அத்தோடு 0112623720 என்ற இன்னொரு இலக்கத்தையும் கொடுத்து விரும்பிய நேரத்தில் தன்னை குமாரி தொடர்பு கொள்ள முடியும் என்றும் கூறினார்.அத்தோடு மங்கள சம்வீரவின் 2 தொலைபேசி இலக்கமும் குமாரிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.அந்த இலக்கங்கள் 0777576495 மற்றும் 0115367704 எனும் இலக்கங்களாகும்.இந்த இலக்கத்திற்கு தொடர்புகொண்டால் பிரதீப் என்ற நபரே தொலைபேசிக்குப் பதிலளிப்பார் என்று குமாரிகூரே பின்னர் குறிப்பிட்டிருந்தார்.

கூட்டம் முடிந்த கையோடு ரிஷாட் மற்றும் நஜீப் ஆகியோர் குமாரியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

இன்டகொன்டினென்டல் ஹோடலில் குமாரிக்காக ஒரு அறை முன்பதிவு செய்யப்பட்டது.அந்த அறை ஜனாதிபதி அலுவலகர்களில் ஒருவரான ‘’மார்க் ஹில்ஸ்டொப்’’ என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.அவர் தங்கியிருந்த அறையின் இலக்கம் 625.ஹோட்டலில் இருந்து அறை 625க்கு வரும் அனைத்து பில்களும் ‘’ஏகனாநாயக’’ என்ற பெயரில் கையொப்பமிடப்படவேண்டும் என குமாரி அறிவுறுத்தப்பட்டிருந்தார்.அவற்றில் ஒரு பில்லில் தவறுதலாக கே.கூரே என்று அவர் கையொப்பமிட்டிருந்தார்.

இந்த தகவல்களின் உண்மைத்தன்மையைப் பரிசோதிக்க விரும்புவர் இங்கே குறிப்பிடப்படும் திகதிகளில் அறை 625க்கான இன்டகொன்டினென்டல் ஹோடலில் பழைய ரிசீதுகளை பரிசோதித்துப்பார்க்கமுடியும்.அத்தோடு மேலே தரப்பட்டிருக்கும் தொலை பேசி இலக்கங்களையும் சரிபார்த்துக்கொள்ள முடியும்.அதே நேரம் ஜனாதிபதியுடனானான குமாரியின் சந்திப்பையும் எம்மால் ஆதாரங்களோடு நிரூபிக்க முடியும்.
இங்கு கூறப்படுகின்ற விடயங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி,மங்கள சமரவீர,ரிஷாத் பதியுதீன்,நஜீம் ஏ மஜீத் யாரும் எனக்கெதிராக மான நஷ்ட வழக்குத் தொடரமுடியும்.இதை மீண்டும் வெளியில் கொண்டுவந்து மக்களுக்கு உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கும், வழக்காடுமன்றத்தில் அவர்களைக் கிழி கிழி என்று கிழிக்கும் அந்த இன்பமான நாட்களுக்காகவும் நான் காத்திருக்கிறேன்.

மறுநாள் ரிஷாடும்,நஜீபும் குமாரியைச் சந்தித்து ஜனாதிபதி எழுதச் சொன்ன கடிதம் தயாரா என்று வினவினார்கள்.ஆம் என்ற குமாரி அதனை நீட்ட ரிஷாடும்,நஜீப் ஏ மஜீதும் அவற்றை பிரதிகள் எடுத்தபின்னர் அசலைப் பாதுக்காப்பாக வைத்திருக்குமாறு குமாரியிடம் மீள ஒப்படைத்தனர்.

அன்று திகதி ஏப்ரல் 21,2004.குமாரியின் தொலைபேசி ஒலித்தது.ரிஷாட் பதியுதீன் பேசினார்.”நாளை பாராளுமன்றம் செல்ல தயாராகுங்கள்’’

மறு நாள் ஹக்கீமுக்கு பாராளுமன்றத்தில் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

தொடரும்….

RAAZI MUHAMMADH JAABIR