இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்..?

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் இணங்கியுள்ளனர்.

இந்த தகவலை அமைச்சர் தலதா அத்துகோரளை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் அமைச்சரவை மீளமைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய மாற்றத்தின்படி தமது அமைச்சுக்கு பதிலாக பல அமைச்சர்கள் வேறு துறைகளுக்கான பொறுப்புக்களையும் கொண்டிருப்பர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அமைச்சரவை மீளமைப்பு தொடர்பில் அமைச்சர்கள் எவரும் கவலை கொள்ளவில்லை என்றும் அத்துகோரளை கூறியுள்ளார்.