“ஜனாதிபதி விரக்தி; கொடுத்த வாக்குறுதிகளைச் செய்யாத இந்த அரசாங்கத்தில் இருந்து பயனில்லை”…..!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரக்தியடைந்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகளைச் செய்யாத இந்த அரசாங்கத்தில் இருந்து பயனில்லை என்பதால் தாங்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததாக அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சீ.பி.ரத்நாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் அவர்களது அமைச்சு பதவிகளை இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இராஜினாமா செய்தனர்.

இதன் பின்னர், அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாடொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்கள், ‘இன்று இந்த அரசாங்கத்தை ரணில் விக்கிரமசிங்கவே கொண்டு நடத்துகின்றார். அவர், பழிவாங்கலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. பொலிஸ் மா அதிபருக்கு ஆணையிடுவதும் அவரே’ என்று கூறினர்.

article_1432188562-ri_Fotor