இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற கோப் குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் நடந்த விவாதத்தில் உரையாற்றியவர்களின், அறிவார்த்தமாக பேசியவர்களின் உரைகளுக்கு இலத்திரனியல் ஊடகங்களில் இடம் கிடைக்கவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி நடந்த ஊழல் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் முக்கியமான உரைகளை நிகழ்த்தப்பட்டன.
மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் அடங்கி அந்த உரைகளை இலத்திரனியல் ஊடகங்கள் வெளியிடவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் பல சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் ஆவேசமாகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசும் அரசியல்வாதிகளுக்கு கருத்துக்களை வெளியிட ஊடகங்கள் இடமளிக்கின்றன.
இதன் மூலம் நாட்டின் சாதாரண மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைப்பதில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.