Srilanka muslim congress இனதும் All Ceylon makkal congress இனதும் தலைவர்கள் ஐக்கியத்துடன் செயற்படுவார்களானால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் நிறையவே தீர்வுகளைக் கண்டு கொள்ள முடியும். தேசிய ரீதியாக உங்களது சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைக்களுக்கு தீர்வு காணப்பதற்கு இவர்கள் இருவரினதும் ஒற்றுமை மிக அவசியம்
அமைச்சரவைக் கூட்டங்களில் கூட இவர்கள் முரண்பட்டுக் கொள்கிறார்களே..? உங்களது சமயத் தலைவர்கள் ஒன்றிணைந்து இவர்களது முரண்பாட்டை தீர்த்து ஐக்கியப்படுத்த முயற்சிக்கக் கூடாதா?
நான் தொலைபேசியில் உரையாடிய சிங்கள சிரேஷ்ட, பிரபல அமைச்சர் ஒருவர்தான் இவ்வாறு என்னிடம் கூறினார்.
இதனை நான் எனது முகநூலில் பதிவிடவா எனக் கேட்டபோது நிச்சயமாக பதிவிடுங்கள் ஆனால், அமைச்சர்களான ஹக்கீமும் ரிஷாத்தும் எனது நெருக்கமான நண்பர்கள். எனவே, எனது பெயரை வெளியிட்டு விடாதீர்கள். சிலவேளைகளில் அவர்கள் என்னுடன் கோபித்து விடுவார்கள். அவர்கள் இருவரும் தங்களது அமைச்சுகள் ஊடாக எனது ஆதரவாளர்கள் பலருக்கு தொழில் வழங்கியவர்கள் என்றார்.
ஆனால் இறுதியாக அவர் பயன்படுத்திய வார்ததைகளுக்கான அர்த்தத்தை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாது உள்ளது. நான் இதனை அவரிடம் கிண்டிக் கேட்டகவும் விரும்பவில்லை
அவர் இறுதியாக இவ்வாறு கூறினார் ”ரிஷாத் எமத்திதுமா பவ்” அதாவது “ரிஷாத் அமைச்சர் பாவம்….” இதனை எதற்காக கூறினாரோ தெரியாது.