உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தை துரிதமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பல சிவில் அமைப்புகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
மிகவும் நியாயமான சமூக முறைமைக்காக புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு பல பிரதிபலன்கள் கிடைக்கும் எனவும் இதனை எதிர்ப்பவர்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் வரலாறு வழங்கியுள்ள சந்தர்ப்பத்தை தாமதமின்றி பயன்படுத்தி புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வரவேண்டும் எனவும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், நீதித்துறை சுயாதீனம், மாகாண மட்டத்திலான மேன்முறையீட்டு நீதிமன்றங்களை ஸ்தாபித்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்து வலுப்படுத்துதல் போன்ற சிறந்த யோசனைகள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் அடங்கியுள்ளன.
எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நெருக்கடியான சூழ்நிலையை தடுக்க இது உதவும் எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.